வாரிசுகளுக்கு ரூ.279 கோடி முறைகேடாக மாற்றம்: 3 வாரத்தில் பதில் அளிக்க மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

விஜய் மல்லையா தன்னுடைய வாரிசுகளுக்கு முறைகேடாக ரூ.279 கோடி (4 கோடி டாலர்) பணத்தை மாற்றி இருக்கிறார். இதுகுறித்து 3 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவ ருக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிபதி கள் குரியன் ஜோசப் மற்றும் ஏ.எம். கான்வில்கர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 2-ம் தேதிக்குள் இது குறித்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஷியாம் திவான், கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் கடன் வசூல் தீர்ப்பாயம் ஆகியவை வழங்கிய உத்தரவை மீறி விஜய் மல்லையா தன்னுடைய வாரிசு களுக்கு 4 கோடி டாலர் தொகையை முறைகேடாக மாற்றி இருக்கிறார் என குற்றம் சாட்டினார்.

விஜய் மல்லையாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த விவகாரத்தில் பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த அவகாசம் அவருக்கு கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து 4 கோடி டாலரை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் மல்லையா பெற்றார். இதனால் அவர் வசம் இருக்கும் வெளிநாட்டு சொத்துகள் குறித்த தகவல்களை பெற முகாந் திரம் இருப்பதாகவும், அதனால் மல்லையா வசம் இருக்கும் வெளி நாட்டு சொத்துகளை ஒரு மாதத் துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த அக்டோபர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வங்கிகளுக்கு சேரவேண்டிய 4 கோடி டாலர் பணம் மல்லையாவின் ஸ்விஸ் வங்கி கணக்கில் இருக் கிறது. இதனை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என அட் டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறினார்.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி டியா ஜியோ நிறுவனத்திடம் இருந்து மல் லையா 4 கோடி டாலர் பெற்றதாக வும், அந்த தொகையை தன் சொத்து பட்டியலில் மல்லையா குறிப்பிட வில்லை என எஸ்பிஐ தலைமையி லான வங்கிகள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்