8% வளர்ச்சியை எட்டுவோம்: சக்திகாந்த தாஸ் நம்பிக்கை

By பிடிஐ

இந்தியா அடுத்த கட்ட வளர்ச் சிக்கு தயாராகிறது. இந்த ஆண் டில் பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் 8% வளர்ச்சியை எட்டு வோம் என பொருளாதார விவ காரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விழா ஒன்றில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது.

கடந்த வருடம் 7.6% வளர்ச்சி அடைந்தோம். இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன். அதனால் 8% வளர்ச்சி அடைய முடியும். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற அந்த நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் காரண மாக பங்குச்சந்தை மற்றும் கரன்ஸி சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. இந்த நிலைமை இன்னும் சில காலத்துக்கு நீடிக்கும். ஆனால் இந்தியா இந்த சூழ்நிலையை கையாள தயாராக இருக்கிறது என்றார்.

நடப்பு நிதி ஆண்டில் 7-7.75% வளர்ச்சி இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. அதே போல 7.6% வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிகழ்ச்சியில் தொழில் கொள்கை வகுப்பு மற்றும் மேம்பாடு செயலாளர் ரமேஷ் அபிஷேக்கும் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறும் போது. தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை காலம் மூன்று முதல் ஐந்து வருட காலத்துக்கு இருக்கிறது. இதனை 7 வருடங்கள் வரை உயர்த்த நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

சர்வதேச அளவில் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவதாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

க்ரைம்

25 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்