தங்கம் விற்பனை சீரடைய ஓர் ஆண்டு ஆகும்: ஜூவல்லரி வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நிதின் கண்டேல்வால் தகவல்

By பிடிஐ

பண மதிப்பு நீக்கம் காரணமாக தங்கம் விற்பனை 80 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. தற்போது நிலைமை மேம்பட்டு வந்தாலும் முழுமையாக விற்பனை சீரடைய ஒராண்டு ஆகும் என அனைத்திந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் நிதின் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பண மதிப்பு நீக்கம் அறிவித்த சமயத்தில் 80% அளவுக்கு தேவை குறைந்தது. ஆனால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் திருமண காலம் என்பதால் தங்கத்தை மறுசுழற்சி செய்வது 3 மடங்கு அதிகரித்தது.

நீண்ட காலத்தில் பண மதிப்பு நீக்கம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி நகை வாங்க முன்வருவார்கள். இதனால் வெளிப்படைத்தன்மை உருவாகும். நீண்ட கால அடிப் படையில் இந்த துறைக்கு இது நல்லது. நீண்ட கால அடிப்படை யில் நல்லதாக இருந்தாலும் நிலைமை சீரடைய இன்னும் ஒருவருட காலம் ஆகும் என்றார்.

நகை மற்றும் ஜெம் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் பிரவீண்சங்கர் பாண்டியா கூறும் போது, ஏற்றுமதி சார்ந்து இயங்கு வதில் 60 சதவீதம் முறைப்படுத் தப்பட்ட நிறுவனங்களாகவும், 40 சதவீதம் முறைப்படுத்தப் படாமலும் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவர்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களை மொபைல் பேங்கிங் மூலம் நாங்கள் இணைக்கிறோம்.

அதிர்ஷ்டவசமாக தீபாவளி முடிந்த பிறகு மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இதனால் இந்த துறை பணியாளர் கள் வருடாந்திர விடுமுறையில் தங்களது ஊர்களுக்கு சென்றிருந் தனர். ஆண்டு விடுமுறைக்காக எங்களது தயாரிப்பு மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பெரிய அளவில் நாங்கள் பாதிக்கப்பட வில்லை. இல்லை எனில் இந்த துறை கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும்.

ஒட்டு மொத்தமாக இந்த துறை 4 முதல் 5 சதவீதம் பாதிக் கப்பட்டிருந்தாலும், முறைப்படுத் தப்படாத பிரிவில் 10 முதல் 15 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இன்னும் 3 முதல் 4 மாதங்களில் உற்பத்தி சீரடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். நீண்ட கால அடிப்படையில் இந்த நடவடிக்கை இந்த துறைக்கும் பணியாளர் களுக்கு சாதகமாக அமையும் என்று பாண்டியா கூறினார்.

பண மதிப்பு நீக்கம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் குறுகிய காலத்தில் தங்கத்தின் தேவை குறையும் என்று உலக தங்க கவுன்சில் முன்னர் கூறியிருந்தது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

உலகம்

10 mins ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்