முதல் இடத்தைத் தக்கவைக்க தீவிரம்: ஜியோமி புதிய போன்களை அறிமுகப்படுத்தியது

By செய்திப்பிரிவு

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனம் மிகக் குறுகிய காலத்திலேயே ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இந்நிலையில், ஸ்மார்ட் போன் விற்பனையில் தனது சந்தையை மேலும் விரிவுபடுத்த தீவிரமாகக் களமிறங்கியுள்ள ஜியோமி புதிதாக மூன்று போன் களை நேற்று சென்னையில் அறி முகம் செய்தது. இந்நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள், வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த போன்கள், பிற நிறுவனங் களின் போன்களைக் காட்டிலும் குறைவான விலையில் தரப்படு கிறது. ரெட்மி 6ஏ, ரெட்மி 6, ரெட்மி 6 புரோ என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இந்த போன் களின் முதல் வேரியன்ட் விலை முறையே ரூ. 5,999, ரூ. 7,999, ரூ. 10,999. இரண்டாம் வேரியன்ட் போன்கள் முறையே ரூ. 6,999, ரூ. 9,499, ரூ. 12,999க்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

போன்களை அறிமுகப்படுத்தி பேசிய அந்நிறு வனத்தின் ஆன்லைன் விற்பனைப் பிரிவு தலைவர் ரகு ரெட்டி, “ரெட்மி 5ஏ போன் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போன் என்ற இடத்தைக் கடந்த நான்கு காலாண்டுகளாக வகித்து வருகிறது. இந்த இடத்தைத் தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இதற்காக வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஆயிரம் சேவை மையங்களை நிறுவியுள்ளோம். ஸ்மார்ட்போன்கள் எல்லோருக்கு மானதாக இருக்க வேண்டும் என்பது தான் ஜியோமி நிறுவனத்தின் நோக்கம். முக்கியமாக இந்தியா வில் விற்பனை செய்யப்படும் 95 சதவீத போன்கள் இந்தியாவிலேயே தயார் செய்யப்படுகின்றன என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார். இந்தப் புதிய போன்கள் வரும் செப்டம்பர்10, 11, மற்றும் 19 தேதிகளில் அமேசான் மற்றும் எம்ஐ டாட்காம் தளங்களில் விற்பனைக்கு வரு கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

15 mins ago

தமிழகம்

31 mins ago

கருத்துப் பேழை

39 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

51 mins ago

மேலும்