கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம்: மின்னணு வாகன தொழில்நுட்பங்களை ஊக்கப்படுத்த நிதி ஆயோக் பரிந்துரை

By செய்திப்பிரிவு

மின்னணு வாகன தொழில்நுட்பங் களை ஊக்கப்படுத்தினால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கச்சா எண் ணெய் இறக்குமதியை படிப்படியா கக் குறைக்கலாம் என்று நிதி ஆயோக் கூறியுள்ளது.குறிப்பாக ரூ.1.2 லட்சம் கோடிக்கு இறக்கு மதியை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டு களில் இந்தியாவில் கச்சா எண் ணெய் இறக்குமதி மதிப்பில் ரூ. 1.2 லட்சம் கோடி குறைக்க வேண்டும். மேலும் எரிபொருளுக்கு பதிலாக மின்னணுவில் இயங்கும் தொழில் நுட்பத்துக்கு மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 17 கோடி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஒரு நாளில் அரை லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துகின்றன. அல்லது ஒரு ஆண்டில் 200 லிட்டர் பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 3,400 கோடி லிட்டர் பயன்படுத்து கின்றன.

நேற்று வெளியிட்ட `புகையில்லா வாகனங்களுக்கான கொள்கை வரைவு’ என்கிற அறிக்கையில் இதனைக் கூறியுள்ளது.

ஒரு லிட்டர் 70 ரூபாய் என்றா லும் ரூ.2.4 லட்சம் கோடி செலவழிக் கப்படுகிறது. இதில் 50 சதவீத தொகை கச்சா எண்ணெய் இறக்கு மதிக்காக செலவிடப்படுகிறது. (50 சதவீதம் வரியாகச் செல்கிறது). இதில் இறக்குமதியை பாதியாக குறைத்தால் ரூ. 1.20 லட்சம் கோடியை இந்தியாவால் சேமிக்க முடியும்.

எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட் பங்களுக்கு ஊக்கப்படுத்தினால் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இது சாத்தியமாகும். மின்னணு வாகனங்களுக்கு படிப்படியாக மாறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனங்கள்தான் காற்று மாசுவில் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கு பதிலாக மாற்று எரிசக்தி வாகனங் களை இயக்கினால் நிச்சயமாக காற்றின் தரத்தினை மேம்படுத்த முடியும். சிறிய மற்றும் பொது போக்குவரத்து மின்னணு வாகனங் களில் இந்தியா முன்னிலை வகிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன என்றும் நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

க்ரைம்

9 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

க்ரைம்

49 mins ago

இந்தியா

47 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்