நிதி நெருக்கடியில் உள்ள ஐஎல் அண்ட் எப்எஸ் பங்குகளை வாங்க 30 நிறுவனங்கள் விண்ணப்பம்

By செய்திப்பிரிவு

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தின் சொத்துகளை வாங்குவதற்கு 30 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சாலை கட்டமைப்பு வசதிகளை செய்யும் கான்ட்ராக்டை மேற்கொள்ள நிறுவனங்கள் முன்வந்துள்ளது. அந்த வகையில் 22 வகையான சொத்துகளை வாங்க நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.

சொத்துகளை விற்று நிதி நெருக்கடியை சமாளிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி நிறுவ னத்தின் சொத்துகளை வாங்க 30 நிறு வனங்கள் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக் கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஎல் அண்ட் எப்எஸ் சொத்து களை வாங்க விருப்பம் தெரிவிக்க விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன வரி 8-ம் தேதியாகும். இதன்படி தாக்கல் செய்துள்ள விண்ணப்பங் களில் தகுதியுள்ள நிறுவனங்கள் ஆராய்ந்து முடிவு செய்யப்படும். உத்தி சார் அடிப்படையில் முதலீடு செய்வோர் மற்றும் வெறுமனே நிதி முதலீடு செய்வோர் என இரு பிரிவிலும் நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை விண்ணப்பம் மூலமாக தெரிவித்துள்ளன. தகுதியுள்ள நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் பிறகு அவை அளித்துள்ள தகவல்கள் நேரில் பரிசீலிக்கப்படும். அதன் பிறகு வர்த்தக ரீதியிலான ஏல முறையை பின்பற்றப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் சொத்துகளை விற்பது மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (என்சிஎல்டி) அனுமதி பெற்றாக வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதியிலிருந்து ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டது. இந்நிறுவனத்தின் மொத்த கடன் சுமை அக்டோபர் 8, 2018 நிலவரப்படி ரூ. 94 ஆயிரம் கோடியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

விளையாட்டு

13 mins ago

கல்வி

33 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்