பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்று அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை நிலவரத்துக்கு ஏற்ப நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திய நிலையில், இன்று 4-வது நாளாக விலை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், நேற்றைய விலையைக் காட்டிலும் பெட்ரோல் லிட்டருக்கு 49 முதல் 60 காசுகள் வரையிலும், டீசல் 59 முதல் 75 காசுகள் வரையிலும் பல்வேறு நகரங்களில் அதிகரித்துள்ளன.

டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 49 பைசா உயர்ந்து, ரூ.69.75 ஆக அதிகரித்துள்ளது. டீசல் 63 பைசா உயர்ந்து, ரூ.63.39 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து, ரூ.75.39 பைசாவாகவும், டீசல் 62 பைசா உயர்ந்து, ரூ.66.66 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.67.26 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.72.40 ஆகவும் அதிகரித்துள்ளது.

பெங்களூரில் பெட்ரோல் லிட்டர் 51 காசு அதிகரித்து ரூ.72.04ஆகவும், டீசல், 61 பைசா உயர்ந்து ரூ.65.78 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.56 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.33 பைசாவும் அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான சவுதி அரேபியா தனது உற்பத்தியா நாள் ஒன்றுக்கு 8லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச சந்தையில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. அடுத்து வரும் நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

வேலை வாய்ப்பு

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்