இன்ஷூரன்ஸ் விற்பனையில் ப்ளிப்கார்ட்: பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

By பிடிஐ

இ-காமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், இன்ஷூரன்ஸ் விற்பனையில் இறங்க உள்ளது. இதற்காக பஜாஜ் அலை யன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் துள்ளது. இது தொடர்பாக அந்த நிறு வனம் வெளியிட்டுள்ள செய்தியில்,

இன்ஷூரன்ஸ் திட்டங்களை விற் பனை செய்வதற்கான கார்ப்பரேட் ஏஜெண்ட் லைசன்ஸ் கிடைத்துள்ளது. பஜாஜ் அலையன்ஸ் பொதுக் காப் பீடு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் ப்ளிப் கார்ட் தளத்தில் விற்பனை செய்யப் படும் அனைத்து பிராண்ட் மொபைல் போன்களின் பாதுகாப்புக்கும் இன்ஷூரன்ஸ் தீர்வுகளை அளிக்க முடி யும். இந்த திட்டம் அக்டோபர் 10-ம் தேதி தொடங்க உள்ள `பிக் பில்லியன் டே’ விற்பனையிலிருந்து தொடங்கப் படும் என்று குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு போன்களை விற்பனை செய்த பின்னர், அடுத்த கட்டமாக அதனைப் பாதுகாப்பதற்கான இன்ஷூரன்ஸ் தீர்வுகளையும் அளிக்க வேண்டும் என நிறுவனம் முடிவு செய்தது. இந்த திட்டத்தில் இன்ஷூரன்ஸ் எடுப்பது தொடங்கி, கிளைம் செய்வது வரை அனைத்தையும் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் அளிக்க உள்ளோம் என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ரவி கரிகிபதி கூறினார்.

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தபன் சிங்கால் கூறுகையில், இரண்டு நிறுவனங்களும் இணைந்து மொபைல் பாதுகாப்பு திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளன. இது பல லட்சம் வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் என்றார்.

இந்தியாவில் 36 சதவீத ஸ்மார்ட் போன் பயன்பாடு உள்ளது. பெரும்பா லும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர் களுக்கு போன் திருடுபோவது, சேதமடைவது போன்றவைகளால் இழப்பு ஏற்படுகின்றன. இதற்கான தீர்வாக இன்ஷூரன்ஸ் திட்டங்கள் இருக்கும் என்று பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

33 mins ago

க்ரைம்

37 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்