வங்கித் துறையின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்: பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் கணிப்பு

By செய்திப்பிரிவு

இந்திய வங்கித்துறை வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என பிட்ச் ரேட்டிங்ஸ் அமை ப்பு கணித்துள்ளது. இது தொடர் பாக சர்வதேச தரச் சான்று நிறுவனமான பிட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

வாராக்கடன் அளவு அதிகரிப்பு மற்றும் வங்கிகளின் மூலதனத்தில் ஏற்பட்டுள்ள தேக்கமான நிலை யால் இந்திய வங்கித்துறை எதிர்மறை வளர்ச்சியை சந்திக்கும். குறிப்பாக பொதுத்துறை வங்கி களின் செயல்பாடுகள் மோசமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் 21 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கி களின் மூலதன வளர்ச்சி 8 சதவீதத் துக்கு கீழாக செல்லும். வங்கிகளுக் கான மூலதனத்தை அதிகரிப்பதற் கான முயற்சிகள் மேற்கொண் டாலும், இந்த வங்கிகளின் மூலதன நிலை ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ளது.

வாராக்கடன் அளவு மேலும் அதிகரிக்கும். 2018 நிதியாண்டில் கடன் வளர்ச்சி 10.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி யாண்டில் இது 4.4 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் தனியார் துறை வங்கிகளின் வளர்ச்சி 2018-ல் பலவீனமாக இருந்தா லும், பொதுத்துறை வங்கி களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

தனியார் வங்கிகளைக் காட்டி லும் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவு இருமடங்காக அதிகரித்து 15.6 சதவீதமாக உள்ளது. 2019 நிதியாண்டில் இந்திய வங்கிகளின் வளர்ச்சி 13.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்திய வங்கிகள் 2019-ம் ஆண்டுக்குள் பேசல் 3 விதிமுறைகளை எதிர்கொள்ள 4,000 கோடி டாலர் முதல் 5,500 கோடி டாலர் வரை மூலதனத்தை திரட்ட வேண்டியிருக்கும் என்றும் பிட்ச் கூறியுள்ளது.

இந்திய வங்கிகளில் முதல் காலாண்டு வளர்ச்சி சிறிய அளவில் மேம்பட்டுள்ளது. கடன் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. சில்லரை வர்த்தகம் மற்றும் சிறு குறு தொழில்துறை தவிர்த்து புதிய சிக்கல்கள் வங்கித் துறைக்கு உருவாகி வருவதாகவும் பிட்ச் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்