பேட்டரி வாகனங்களுக்கு ரூ. 9,400 கோடி சலுகை: மத்திய அரசின் வரைவு திட்டம் தயார்

By செய்திப்பிரிவு

பேட்டரி மற்றும் ஹைபிரிட் உள்ளிட்ட சூழல் பாதுகாப்பு வாகனங்களுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற் காக ரூ.9,400 கோடியை ஒதுக்குவதற்கான வரைவு திட்டத்தையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இதன்படி அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை மானிய உதவி கிடைக்கும். இதேபோல ரூ.1.5 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை வாங்குவோருக்கு ரூ.30 ஆயிரம் வரை மானிய உதவி அளிக்கவும் இந்த வரைவு திட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல சூழல் காப்பு வாகனங்களை பயன்படுத்தும் வாடகைக் கார் ஓட்டுவோர் மற்றும் பஸ்களை இயக்குவோருக்கு மானிய உதவிகளை அளிக்கவும் இந்த வரைவுத் திட்டம் வகை செய்துள்ளது.

உயர் வேகத்தில் இயக்கப்படும் 2 சக்கர வாகனங்களின் அதிகபட்ச விலை ரூ.1.5 லட்சமாக இருந்தால் அதற்கு ரூ.30 ஆயிரமும், குறைவான வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரமும் மானியம் அளிக்கப்படும். இதேபோல ஆட்டோக்களுக்கு ரூ.75 ஆயிரமும், கார்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும் இலகு ரக வர்த்தக வாகனங்களுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலும் பஸ்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் (அதிகபட்ச விலை ரூ.3 கோடியாக இருக்கும்பட்சத்தில்), டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களின் அதிகபட்ச விலை ரூ.2 கோடியாக இருந் தால் அவற்றுக்கு ரூ.50 லட்சம் மானிய உதவி வழங்கவும் வரைவுத் திட்டம் வகை செய்துள்ளது. வாகனங்களைத் தயாரிக் கும் நிறுவனங்களுக்கும் இதே அளவு மானிய உதவி அளிக்கப் படும்.

அரசின் இந்த வரைவுத் திட்டம் பேட்டரி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இல்லை என்ற கருத்து உருவாகியுள்ளது. அனைத்து வகையான பேட்டரி வாகனங்களுக்கும் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இத் துறையினரிடையே இருந்தது. ஆனால் வரைவு அறிக்கையில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றரை லட்சம் வரை தயாரிக்க வேண்டும். அதேபோல 50 ஆயிரம் கார்கள், 4 ஆயிரம் எல்சிவி வாகனங்கள், 5 ஆயிரம் பஸ்கள், 200 டிரக்குகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத்தான் இந்த மானிய உதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

விளையாட்டு

33 mins ago

க்ரைம்

37 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்