மத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தை

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டதால் அதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், பங்குச்சந்தை சார்ந்த நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வரியின் மூலம் அரசுக்கு கூடுதலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும் பின்னர் சீரடைந்தது. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடன் சரிவடைந்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டது.

இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து, 35,906 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோலவே, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 11,016 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்