நெட்டிசன் நோட்ஸ்: நாடாளுமன்றத்தில் ராகுலின் உரை - சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானத்தில் பேசிய ராகுல் காந்தி உரையையும், ராகுலின் பேச்சின் முடிவில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்ததையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

 

Raja sudalaikkani (   Raja)

‏"நீங்கள் என்னை வெறுப்பீர்கள்!

நீங்கள் என்னை பப்பு என்று அழைக்கலாம்!

நீங்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டுவேன்!

ஆனால் உங்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சி எனக்கு இல்லை. நான் இந்த வெறுப்பை வெளியே எடுத்து அன்பாக மாற்றுவேன் "

S T R A N G E R

‏இது வீடு இல்ல சார் விக்ரமன் சார் படம் மொமன்ட்... இன் பார்லிமென்ட்..

வந்தேறிகளின் எதிரி

‏பப்புவின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாதவர்கள் கத்தி கூச்சல் போட்டு சமாளித்தனர் ....

அவர் பப்பு இல்லடா. உங்கள் கட்சி எதிர்காலத்துக்கான ஆப்பு.

 

திருமறைக்காடான்

‏#ராகுல் காந்தி பேச்சால நாட்டில் நிலநடுக்கம் வரல.ஆனா, பாஜகவுல மோடிக்கும்,அவரது சகாக்களுக்கும் சக்திவாய்ந்த நில நடுக்கம் வந்திருக்கு என்பது மட்டும் உண்மை..! #NoConfidenceMotion #RahulGandhi

RâjâsêkârChêm®

‏ஆரோக்கியமான அரசியலுக்கு நான் தயார் என்பது போல் ராகுலின் அழகான செயல்!  வரவேற்கத்தக்கது.       

Raj Kamal Appun

‏பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்  : ராகுல்

ஷாகுல் புதுவை

‏ராகுல் ஜி செம..செம...செம. ! தெறிக்க விட்டு விட்டாயே!

wesleycongress

‏நாடாளுமன்றத்தையை அலற விட்டார் ராகுல் காந்தி

அன்பே சிவன்   

‏என் மனதில் மோடிக்கு என்றும் இடமுண்டு; காங்கிரஸின் முக்கியத்துவத்தை உணர்த்தியதற்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்:  ராகுல்காந்தி

ஷரண்

‏நம்ம ராகுல் காந்தியா இது...   மோடியையா இப்டி பொளக்குறாரு 

திருமறைக்காடான்  

‏ராகுல்காந்திய பப்புன்னு சொல்லி கிண்டல் பண்ணவன்லாம் கப்சிப்னு இருக்கான்..

ரவி

‏என்ன ஒரு அற்புதமான பேச்சு ராகுல் காந்தி குத்தல், நகைச்சுவை, ஆக்ரோஷம் ..

Thala Facts

ராகுல் காந்தி .. "இனிமே நான் பப்பு இல்லடா .. உங்களுக்கான ஆப்பு"னு பேசிட்டு போயிருக்கார்...    

Jokin Jeyapaul

‏கிழிச்சி தொங்கவிட்டுடாப்லா

‏இது மக்களின் குரல்    

Rajapandiyan Raja

‏இன்னைக்கு தான் எதிர்க்கட்சியா #ராகுல்காந்தி பேசி இருக்கரு 

Hasan Kalifa

‏ஒரு நாயகன் உதயமாகிறான்..

Mohammad Sheik

‏ராகுல் காந்தியின் இன்றைய உரை வரலாற்று சிறப்புமிக்கது. திறமையற்றவர் ராகுல் என்ற மீடியா பிம்பம் மீண்டுமொருமுறை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நேர்மையான தேர்தல் நடைபெறும் எனில் அடுத்த பிரதமராக ராகுல் காந்தியைக் காணலாம்(இறைவன்)

பகுத்தறிவாளன்

காவிகளால் காமெடியனாக சித்தரிக்கப்பட்ட ராகுல் இன்று காவிகளின் இறுதி அத்தியாயத்தை எழுத வந்த கதாநாயகனே நான் தான்டா என்று வெளிப்படுத்திய தருணம்...

Ramanujam.K

‏ராகுல் பூனைக்குட்டி அல்ல. புலிக்குட்டி

கேள்வி கேட்பவன்

‏விட்டு விளாசுறான்யா மனுஷன்.

Pandaravadai Pdv

‏பிரதமர் பயப்படுகிறார்: ராகுல் காந்தி

பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேச வேண்டும்   

 

zulfiher ali

‏வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் எங்கே - ராகுல் காந்தி சரமாரி கேள்வி.

:- பின்னாடி உக்காந்துட்டு இறங்கி ஓடுறதுக்கா முன்னாடி கேட்டுக்குள்ள வாடா - மொமன்ட்

 

 

Sugumarg

"ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் இருக்கும் மோடி, விவசாயிகளின் இதயத்தில் இல்லை" -ராகுல்காந்தி

ஆதிரன்

‏பப்புக்குட்டினு கிண்டல் பண்ணாங்க இன்னைக்கு உலகளவில் ட்ரெண்ட் ஆயிட்டாரே

Trollywood

‏நிர்மலா சீதாராமனுக்கு பிரஷர் ஏறுகிற அளவுக்கு பேசியிருக்கேன்னா நீ நல்லா தான் பேசிருக்க போல பா ராகுலு.. #RahulGandhi

Ashik Maaran / ஆஷிக் மாறன்

‏ரபேல் விவகாரத்தை பற்றி நான் பேசும்போது, பிரதமர் சிரிக்கிறார்.  ஆனால் அந்த சிரிப்பில் ஒரு பதட்டம் இருக்கிறது. அவரால் என் கண்களைப் பார்க்க முடியவில்லை.  அதை நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் அவர் உண்மையைச் சொல்லவில்லை - ராகுல் காந்தி

ѕтαℓιи кαятнιк     

‏காலங்காலமா அரசியல் தலைவர்கள் குடும்பத்துல வளர்ந்த இவருக்கு அரசியல் தெரிலனு சொன்னவனுங்க எல்லாம்  எல்லாம் இன்னைக்கு ஆடிப்போயிட்டானுங்க.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

விளையாட்டு

29 mins ago

வேலை வாய்ப்பு

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்