சாலையில் குப்பையை எறிந்த இளைஞர்: கண்டித்த அனுஷ்கா சர்மா - விராட் கோலி வெளியிட்ட வீடியோ

By செய்திப்பிரிவு

 சாலையில் காரிலிருந்து கொண்டே குப்பை எறிந்த இளைஞரை நடிகை அனுஷ்கா சர்மா கணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருக்கிறார்.

 அந்த வீடியோவில், பாலிவுட் நடிகையும்,  விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சாலையில் குப்பை எறிந்த நபரின் காரை அருகில் வர கூறி, ‘‘ஏன் குப்பையை சாலையில் போட்டீர்கள். ஏன் பிளாஸ்டிக் குப்பையை சாலையில் போட்டீர்கள். கவனமாக இருங்கள் பிளாஸ்டிக்கை இவ்வாறு சாலையில் போடாதீர்கள். குப்பை தொட்டியில் உபயோகிங்கள்” என்று கூறி அங்கிருந்து தனது காரில் புறப்படுவார்.

இதனை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "பாருங்கள் இந்த மக்கள் சாலையில் பிளாஸ்டிக்கை போடுகிறார்கள். ஆடம்பர காரில் வருவதால் அவர்கள் மூளையை இழந்துவிட்டார்கள். இந்த மக்களா நமது நாட்டை சுத்தமாக வைத்திருக்க போகிறார்கள்? விழிப்புணர்வை பரப்புங்கள். என்று கூறியிருந்தார்.

இந்த  நிலையில் விராட் கோலியின் இந்த பதிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

சிலர் விளம்பரத்துக்காக எதற்கு அந்த நபரை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளீர்கள். அவரிடம் சாலையில் குப்பையை போடாதீர்கள் என்று நிதனாமாக கூறியிருக்க கூடாதா? என்று விமர்சித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்த மீம்ஸ்களை குறிப்பிட்டு விராட் கோலி, "தைரியாமாக இதுபோன்று செய்யாதவர்கள்தான் இதை நகைச்சுவையாக பார்ப்பார்கள். இந்தக் காலத்தில் அனைத்தும் மீம்ஸ்களாக பார்க்கபடுகிறது. இது அவமானம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்