பரணி நட்சத்திரக்காரர்களே! குருப் பெயர்ச்சி பலன்கள்;  லாபம் உண்டு; வீட்டில் நிம்மதி; எதிரிகளின் பலம் குறையும்! 

By செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரணி:

குரு பகவான் உங்களின் இருபதாவது நட்சத்திரரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

எந்தநேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த பரணி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த குருப்பெயர்ச்சியில் பயணங்கள் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள்.
வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அவற்றில் இருந்து விலவிவிடுவார்கள். எதிரிகளின் பலம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளைக் கவனிப்பது நல்லது.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் பெறுவீர்கள். மனவருத்தத்தில் விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடையத் தீவிரமாக செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். கலைத்துறையினருக்கு காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். அரசியல்துறையினர் வாகனங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீகாளியை வழிபடுங்கள். பலம் பெறுவீர்கள். பலவிதமான நன்மைகளை அடைவீர்கள்.

மதிப்பெண்கள்: 68% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்