இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: வீண் அலைச்சல் இருக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேணடாம்.

ரிஷபம்: வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு உண்டு. தாய்வழி உறவினர்களுடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனைபடி சொத்துப் பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: தடுமாறிக் கொண்டிருந்த சில காரியங்கள் முழுமையடையும். விஐபிகளின் ஆதரவு கிட்டும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: வீண் அலைச்சல், பணத்தட்டுபாடு வரக்கூடும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். திடீர் மருத்துவச் செலவுகள், வீண்பழிகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: பால்ய நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பிள்ளைகளுக்கு ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: அரசியல் பிரபலங்களின் நட்பு கிட்டும். உடன்பிறந்தோர் உங்களை புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். வீண் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். விஐபிக்கு நெருக்கமாவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். நீண்ட நாட்களுக்குப் பின் பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.. அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுவது நல்லது.

மகரம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மூத்த சகோதரர் வகையில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புண்ணிய தலங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நட்பு வட்டாரம் விரியும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லுங்கள். அடுத்தவர் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். முன்கோபம் அடிக்கடி தலைதூக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

18 mins ago

வலைஞர் பக்கம்

22 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

40 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்