1 / 10
“தமிழ்மகன் உசேன் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். அவர் அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கிறார். திமுகவில் இப்படி இருக்க முடியுமா? சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர்கூட, திமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இல்லை. இதுதான் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வேறுபாடு.”
2 / 10
“தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த மூன்றாண்டுகளில் கடுமையான விலைவாசி உயர்வு, கிட்டத்தட்ட 40% உயர்ந்துவிட்டது. அரிசி கிலோவுக்கு ரூ.15 விலை அதிகரித்துவிட்டது.”
3 / 10
“அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் 40% உயர்ந்துவிட்டது. மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. வருமானம் குறைந்து செலவுகள் அதிகரித்துவிட்டது. ”
4 / 10
“திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்துவரியே விதிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால், கடைகளுக்கான வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டனர். ரூ.2 ஆயிரம் வரி கட்டி வந்த கடைகள் இன்றைக்கு ரூ.5 ஆயிரம் வரி செலுத்த வேண்டும்.ரூ.1000 வரி செலுத்திய வீடுகள், இப்போது ரூ.2000 செலுத்த வேண்டும். திமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.”
5 / 10
“குறிப்பிட்ட யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியிருந்தால், திமுக ஆட்சியில் 5000 ரூபாய் செலுத்த வேண்டும். பீக் ஹவர் சமய மின் பயன்பாடுகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.”
6 / 10
“திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, வீட்டுவரி, மின் கட்டணம், குடிநீர் வரி அனைத்தும் உயர்ந்துள்ளது. தற்போது குப்பை வரி வேறு போட்டுவிட்டனர்.”
7 / 10
“திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் கனிமவளத்தை திருடும்போது, காவலர் ஒருவர் அதை தடுத்து நிறுத்திப் பிடிக்கிறார். உடனடியாக திமுக பொறுப்பாளர்கள் அந்த காவலரை கடுமையாக தாக்குகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”
8 / 10
“தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? திமுக ஒன்றியச் செயலாளர் ஒரு டிரைவரை கொலை செய்துவிட்டார். அவரை கைது செய்துள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்விட்டது.”
9 / 10
“நாள்தோறும் இரவில் தூங்கி காலையில் கண் விழிக்கும்போது, திமுக கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்று திமுக தலைவரே கூறுகிறார். ஒரு முதல்வர் தன்னுடைய கட்சிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால், இப்படிப்பட்ட கட்சிக்காரர்களைக் கொண்ட ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி சிறப்பாக இருக்க முடியும்.”
10 / 10
“போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து, 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்” என்றார் இபிஎஸ்