Published on : 21 Jul 2020 16:57 pm

பேசும் படங்கள்... (21.07.2020)

Published on : 21 Jul 2020 16:57 pm

1 / 43

காட்பாடியில் திமுக-வின் சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து... அக்கட்சி எம்எல்ஏ நந்தகுமார் தலைமையில் இன்று (21.7.2020) கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : வி.எம்.மணிநாதன்

2 / 43

காட்பாடியில் இன்று (21.7.2020) - திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில்... மின் கட்டண உயர்வைக் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் - வேலூர் எம்பி கதிர்ஆனந்த், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர். படம் : வி.எம்.மணிநாதன்

3 / 43

கரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... வேலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக - இன்று (21.7.2020) டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு மணி நேரம் டாஸ்மாக் கடையை அடைத்து... போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: வி.எம்.மணிநாதன்

4 / 43

சென்னை - பல்லாவரம் பெரிய ஏரிப் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை... இன்று (21.7.2020) பல்லாவரம் வட்டாட்சியர் ராஜேந்திரன் முன்னிலையில்... பொதுப்பணித் துறையினர் அகற்றினர். படங்கள் : எம்.முத்து கணேஷ்

5 / 43
6 / 43
7 / 43

மதுரையில் - தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து... இன்று (21.7.2020) திமுக சார்பில்... அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தளபதி மற்றும் முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

8 / 43

சேலத்தில் நேற்று (20.7.2020) நள்ளிரவு கனமழை பெய்ததையொட்டி... தாதகாப்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெருவில் இருந்த ஒரு வீடு இடிந்து விழுந்தது. ஆனால் உயிர் சேதம் எதுவுமில்லை. படம் : எஸ். குருபிரசாத்

9 / 43

மதுரையில் - ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ்... கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தில்... சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தாலும்... அதன் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

10 / 43

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்... சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் - விண்ணப்பங்கள் பூர்த்திசெய்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க... இக்கல்லூரியில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று (21.7.2020) இந்த மையத்துக்கு சந்தேகங்களைக் கேட்டு அறிந்துகொள்ள சில மாணவர்கள் வந்தனர். படம் : எஸ். குருபிரசாத்

11 / 43

மதுரை நகரில் வைகை ஆற்றுக் கரையின்... இரு பக்கங்களிலும் சாலை அமைக்கும் பணிகள் இன்று (21.7.2020) தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

12 / 43

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்... இன்று (21.7.2020) உரை நிகழ்த்த வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. படம்: எம்.சாம்ராஜ்

13 / 43

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை அமைக்க... ஆலோசனைக்குழு (கமிட்டி) அமைக்காததைக் கண்டித்து... சட்டப்பேரவையில் இருந்து புதுவை அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று (21.7.2020) வெளிநடப்பு செய்தனர். படம்: எம்.சாம்ராஜ்

14 / 43

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரிடல்... இன்று (21.7.2020) கூட்டணிக் கட்சியான திமுக எம்எல்ஏ-க்கள் சிவா, அனிதா, வெங்கடேசன் - ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

15 / 43

புதுச்சேரி அரசு மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்க வலைக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் - தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறி... இழப்பீடு வழங்கக் கோரி... புதுச்சேரி மீனவர்கள் இன்று (21.7.2020) மீன் வளத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை பேராட்டம் நடத்தினர். படம்: எம்.சாம்ராஜ்

16 / 43

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து... இன்று (21.7.2020) திமுக சார்பில்... தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தனது இல்லத்தின் முன்பு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்பு உடையணிந்து... கையில் கண்டனப் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். படங்கள் : ம.பிரபு

17 / 43
18 / 43
19 / 43

’கரோனா’ தொற்று தடை காலத்திலும்... இளைஞர்கள் த‌ங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் கொண்டு... சென்னை - பட்டினப்பாக்கம் கடற்கரையில் உடற்பயிற்சி செய்கின்றனர். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு இந்த இளைஞர்கள் அலைகளுக்கு அருகில்... அலைபேசியை வைத்துக்கொண்டு பொழுதுபோக்குவது போலத்தான் தோன்றும். படங்கள் : பு.க.பிரவீன்

20 / 43
21 / 43

தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில்... இன்று (21.7.2020) தமிழகம் முழுவதும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் கருப்பு உடையணிந்து கையில் கண்டனப் பதாகையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். படங்கள் : ம.பிரபு

22 / 43
23 / 43
24 / 43

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதம் மிச்சமிருக்கும் நிலையில்... இன்று (21.7.2020) சென்னை - திருவான்மியூர் சாலையோரத்தில் களிமண் கொண்டு விநாயகர் சிலையை அச்சில் வார்க்கும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டுள்ளார். படங்கள்: பு.க.பிரவீன்

25 / 43
26 / 43

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.7.2020) சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில்... கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன் - கடன் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் - திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். படம் : மு.லெட்சுமி அருண்

27 / 43

அமேசான் காடுகளில் காணப்படும் அரிய வகை இருவாச்சிப் பறவை, அணில், குரங்கு மற்றும் நூற்றுக்கணக்கான அரிய வகைப் பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு... கொல்கத்தா - அவுராவில் இருந்து... இன்று (21.7.2020) சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் மூலம் வந்தன. அவற்றை... யானைக்கவுனி போலீஸார் கைப்பற்றி... வனத்துறையிடம் ஒப்படைத்தனர். படங்கள் : ம.பிரபு

28 / 43
29 / 43
30 / 43
31 / 43
32 / 43
33 / 43

தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கால நிவாரணத் தொகை ரூ. 3 ஆயிரத்தை அனைவருக்கும் வழங்க வேண்டும்; 10 மாதங்களாக வழங்காமல் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு தையல் தொழிலாளர் சம்மேளனம் சார்பில்... இன்று (21.7.2020) தியாகராய நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தையல் கலைஞர்கள் சம்மேளன தலைவர் பி.சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்... சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படங்கள் : ம. பிரபு

34 / 43
35 / 43
36 / 43

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தனது வீட்டின் முன்பு கருப்பு கொடியை கையில் ஏந்தி... இன்னொரு கையில் பதாகையுடன் கோவை - சிங்காநல்லுர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் இன்று (21.7.2020) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். படம் : ஜெ .மனோகரன்

37 / 43

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.7.2020) ’ கரோனா’ தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் .பி .வேலுமணி ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். படம்: ஜெ .மனோகரன்

38 / 43

தமிழக முதல்வர் பழனிசாமியால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான - அதிநவீன கதீர்வீச்சு கருவியை... இன்று (21.7.2020) சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பார்வையிட்டனர். உடன் - அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுரி முதல்வர் காளிதாஸ் உள்ளிட்டோர். படம் : ஜெ .மனோகரன்

39 / 43
40 / 43

திருநெல்வேலி மாவட்டத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தபோதும்... அம்பை சாலையில் உள்ள பிரான்சேரி குளம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. படங்கள் : மு.லெட்சுமி அருண்

41 / 43
42 / 43

வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்... அப்பகுதியில் இன்று (ஜூலை 21) சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் - பொதுமக்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. படம் : வி.எம்.மணிநாதன்

43 / 43

Recently Added

More From This Category

x