Published on : 28 Jun 2020 18:19 pm

பேசும் படங்கள்... (28.06.2020)

Published on : 28 Jun 2020 18:19 pm

1 / 57

மதுரை - மாநகராட்சி மைய அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்புக்கான ஆலோசனை முகாமை இன்று (28.6.2020) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு , வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயக்குமார், மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

2 / 57

கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் உத்தரவின்படி... அனைத்து கடைகளும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் - 28) வேலூர் சாரதி மாளிகை வணிக வளாகத்தில் அனைத்து கடைகளும் மூட்டப்பட்டிருந்தன. மேலும், எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் வேலூர் அண்ணா சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்

3 / 57

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று (28.6.2020) தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ்... நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.

4 / 57

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் இன்று (28.6.2020) மாநகராட்சி ஊழியர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்துகளை வழங்கினர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

5 / 57

கரோனா தொற்றுப் பரவல் தடுப்புக்காக - அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவையொட்டி... சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் - தற்காலிக ஊழியர்களைக் கொண்டு மதுரை ரயில்வே நிலையத்தின் முதலாவது பிளாட்பாரம் முழுதும் இன்று (28.6.2020) கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

6 / 57

மதுரையில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருவதால்... மதுரை - ராஜாஜி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை வார்டில் உள்ள 600 நோயாளிகளுக்கு ... இம்மருத்துவமனை ஊழியர்கள் தினம் 3 வேளையும் உணவு தயார் செய்து வழங்குகின்றனர். படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

7 / 57
8 / 57
9 / 57
10 / 57

மதுரையில் இன்று (28.6.2020) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் - கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோரை போக்குவரத்து போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 57

வேலூர் - சாலையோரங்களில் மருத்துவ குணமும் அதிக சத்துக்களும் கொண்ட கொய்யா... இன்று (28.6.2020) கிலோ ரூ.60 தொடங்கி ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. படம் : வி.எம்.மணிநாதன்

12 / 57
13 / 57

சென்னையில் இன்று (28.6.2020) எந்தத் தளர்வும் இன்றி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கையொட்டி.... எந்த போக்குவரத்துமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பனகல் மாளிகை மற்றும் பாலம் அமைந்துள்ள சைதாப்பேட்டை சாலை. படங்கள்: ம.பிரபு

14 / 57
15 / 57
16 / 57

சென்னைையில் இன்று (28.6.2020) பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மடிப்பாக்கம் - கீழ்கட்டளைப் பேருந்து நிலையம் அருகே... தேங்கிய நீரில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துச் செல்லும் வாகனம். படங்கள்: ம.பிரபு

17 / 57
18 / 57

திண்டுக்கல் ரயில்நிலையம் செல்லும் சாலையில் - இயற்கை அழகைப் பிரதிபலிக்கும் வகையில்... இன்று (28.6.2020) பூத்துக் குலுங்கின... ஜூன் - ஜூலை மாதங்களில் பூக்கின்ற கொன்றைப்பூக்கள். படங்கள் : பு.க.பிரவீன்

19 / 57
20 / 57
21 / 57
22 / 57

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் - இன்று (28.6.2020) திண்டுக்கல் பூ மார்க்கெட் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டாலும்... அங்கேயும் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் வந்து செல்வோரால் கரோனா தொற்று மேலும் பரவும் அபாய நிலைதான் உள்ளது. படங்கள்: பு.க.பிரவீன்

23 / 57
24 / 57
25 / 57

மதுரையில் இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் - மதுரை பைபாஸ் சாலையில் இருந்து சமயநல்லூர் செல்லும் சாலை வரை... வாகனங்களும் பொது மக்கள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. படம் : எஸ் கிருஷ்ணமூர்த்தி

26 / 57

சென்னையில் இன்று (28.6.2020) ஆங்காங்கே கோடை மழை பெய்தது. இந்நிலையில் - நந்தப்பாக்கம் நெடுஞ்சாலையில் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்துகொண்டே சென்ற சைக்கிள் பெண். படம் : ம.பிரபு

27 / 57

கோவை - உக்கடம் மீன் மார்க்கெட் வளாகத்துக்கு வரும் பொதுமக்களுக்கும் உள்ளே இருக்கும் வியாபாரிகளுக்கும்... இன்று (28.6.2020) கோவை மாநகராட்சியின் சுகாதாரத் துறையினர்.. கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனையை மேற்கொண்டனர். படம் .ஜெ .மனோகரன்

28 / 57
29 / 57
30 / 57

விடுமுறை நாளான இன்று (28.6.2020) கோவை - உக்கடம் பேருந்து நிலையத்தில்... பொள்ளாச்சிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் கூட்டம். படம்: ஜெ .மனோகரன்

31 / 57
32 / 57

சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இன்று (28.6.2020) சைதாப்பேட்டையில் இருந்து... கால்நடையாகவே அடையாறு - புற்றுநோய் மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் செவிலியர். படம் : ம.பிரபு

33 / 57

திருநெல்வேலி - மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன இந்த எச்சரிக்கை கற்கள். பாதாள சாக்கடை குழிக்கு மேல் எச்சரிக்கைக்காக வேண்டி - வைக்கப்பட்டுள்ள இந்த கற்களாலேயே - ஏதேனும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது . . படம் . மு. லெட்சுமி அருண் .

34 / 57

கடந்த சில நாட்களாகவே வெயில்.... சென்னையை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அதற்கு ஆறுதலை அள்ளித் தெளிக்கும் வகையில் இன்று (28.6.2020) சில இடங்களில் மழை பொழிந்து சென்னையை குளிர்வித்தது. படங்கள்:எம்.முத்து கணேஷ்

35 / 57
36 / 57
37 / 57

அழகின் நடனம்: சேலத்தில் இன்று மாலை (28.06.2020) மழை பெய்தது. அதற்கு முன்பாக வானில் கார் மேகம் சூழ்ந்து மழைக்கு அறிகுறி நிலவியபோது... குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வண்ண தோகை விரித்தாடிய மயிலின் எழில் தோற்றம். படம்: எஸ்.குரு பிரசாத்.

38 / 57
39 / 57
40 / 57
41 / 57

கரோனா தடுப்புக்காக இன்று (28.6.2020) இன்று சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால்...சென்னை வேளச்சேரி மேம்பாலம் வெறிச்சோடி காணப்பட்டது. படங்கள்;எம்.முத்து கணேஷ்

42 / 57
43 / 57

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை விட கரோனா பரவல்... அதிகமிருப்பதால்... இப்பகுதிகளில் - கடந்த ஜூன் 19 முதல் சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் - சர்வ தேச சுற்றுலாத் தலமாக விளங்கும் மாமல்லபுரம் நேற்று வெறிச்சோடிக காணப்பட்டது. படங்கள்:எம்.முத்து கணேஷ்

44 / 57
45 / 57
46 / 57
47 / 57
48 / 57
49 / 57
50 / 57
51 / 57

கரோனா தொற்றை ஒழிப்பதற்காக... மடிப்பாக்கம் பகுதியில் சென்னை - மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் இன்று (28.6.2020) நடைபெற்றது. இதில் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு... பயிற்சியைத் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இப்பரிசோதனையை மாநகராட்சி ஊழியர்கள் மாநகராட்சி ஆணையருக்கே மேற்கொண்டனர். படங்கள் : எம்.முத்து கணேஷ்

52 / 57
53 / 57
54 / 57
55 / 57
56 / 57
57 / 57

Recently Added

More From This Category

x