Published on : 27 Jun 2020 18:16 pm

பேசும் படங்கள்... (27.06.2020)

Published on : 27 Jun 2020 18:16 pm

1 / 27

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆரிமுத்துமோட்டூர் பகுதியில்... பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக - தலா ரூ.2.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சூரிய மின்சக்தியுடன் கூடிய 24 பசுமை வீடுகளை... அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் இன்று (ஜூன் - 27) திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர். அருகில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர். படம் : வி.எம்.மணிநாதன்

2 / 27
3 / 27
4 / 27
5 / 27
6 / 27

வேலூரை அடுத்த கீழ்அரசம்பட்டு கிராமத்தில் மலையின் பின்னணியில்... பச்சை பசேல் என நெற்பயிர்களின் இயற்கை எழில் நிறைந்த இன்றைய (27.6.2020) காட்சி. படம் : வி.எம்.மணிநாதன்

7 / 27

தமிழகம் முழுவதும் ’கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து... சேலத்தில் கரோனா தொற்று பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்காமல் தடுக்க - பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சேலம் - சன்னியாசிகுண்டு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதிக்கு செல்லும் சாலை முழுமையாக இன்று (27.6.2020) அடைக்கப்பட்டது. படம் : எஸ்.குருபிரசாத்

8 / 27

மதுரை விமான நிலையத்தில் வெளியூர் செல்லும்... விமானப் பயணிகளின் உடைமைகளுக்கு அங்குள்ள ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி அடிக்கப்பட்ட பிறகே அவர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

9 / 27
10 / 27

மதுரை - ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மை விவசாயக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ’கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை வார்டை இன்று (27.6.2020) வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி .உதயக்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி

11 / 27

மதுரைப் பகுதிகளில் - நாளுக்கு நாள் வேகமாக கரோனா தொற்று பரவி வருவதால்... மதுரை ரயில்வே நிலையத்தில் பழைய ரயில் பெட்டிகளை.... கரோனா வார்டுகளாக மாற்றும் பணி இன்று (27.6.2020) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

12 / 27

திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் ஒருவருக்கு கரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து... இன்று (27.6.2020) காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மற்ற காவலர்களுக்கும் இன்று பரிசோதனை செய்யப்பட்டது. படங்கள் : மு. லெட்சுமி .அருண்

13 / 27
14 / 27

கடந்த சில நாட்களாக திருநெல்வேலி பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. எப்போதுமே கோடைகாலத்தில் கம்பங்கூழ், கேப்பைக் கூழ் வியாபாரம் சூடுபிடிக்கும். தற்போது கரோனா தாக்குதலை சமாளிக்கும் சத்தான ஆகாரங்களில் கூழ் வகைகளும் அடங்கும் என்பதால் இன்னும் அதிகம் விற்பனையாகிறது. பாளையங்கோட்டை - திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு வண்டிக் கடையில் ஒரு குவளை கூழ் ரூ. 10-லிருந்து ரூ.15 வரைக்கும் விற்கப்படுகிறது. படம்; மு. லெட்சுமி அருண்

15 / 27

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக எந்த தளர்வும் இன்றி... முழு ஊரடங்கு நாளை கடைபிடிக்கப்பட இருப்பதால் திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று (27.6.2020) கூட்டம் அதிகம் காணப்பட்டது. மழை காரணமாக திருமழிசை சந்தையில் தேங்கியுள்ள சேற்றினால் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டனர். படம்; ம.பிரபு

16 / 27
17 / 27
18 / 27
19 / 27

சென்னை - முழு ஊரடங்கின் 9-வது நாளான இன்று (27.6.2020) எப்போதும் போக்குவரத்துடன் காணப்படும் தரமணி டைட்டில் பார்க் சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. படம் : ம.பிரபு

20 / 27

திண்டுக்கல் - மாநகராட்சி சார்பில் நடந்த கரோனா தடுப்பு சிறப்பு முகாமில்... இன்று (27.6.2020) கக்கன் நகர் பகுதி மக்களுக்கு... முதற்கட்டப் பரிசோதனை செய்யப்பட்டது. படம்: பு.க.பிரவீன்

21 / 27

கோவையில் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுப்பதற்கு தானியங்கி ஸ்மார்ட் போன் (ஸ்வாப் ரோபோ) ஒன்றை வடிவமைத்துள்ளார் கார்திக் வேலாயுதம் என்ற பொறியியல் மாணவர். இன்று (27.6.2020) அவர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் இதன் செயல்பாடுகளை காட்சி விளக்கம் செய்து காட்டினார். படம் : ஜெ .மனோகரன்

22 / 27
23 / 27

கோவையில் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருடன் இணைந்து... தேசிய மாணவர் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இது தொடர்பாக தேசிய மாணவர் படையினருக்கு கோவை ஒண்டிப்புதூர் தேசிய மாணவர் படையினர் அலுவலகத்தில் சிங்காநல்லுர் சட்டம் ஒழுங்கு துணை ஆய்வாளர் பிரேம் சுகுமார் இன்று (27.6.2020) பயிற்சி அளித்தார். படம் ; ஜெ .மனோகரன்

24 / 27

கோவை பெரியகுளம் பகுதியில்... ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட மின்னொளியில் மின்னும் ‘ஐ லவ் கோவை’ என்ற எழுத்து.

25 / 27

மின்னொளியில் மின்னும் கோவை - வாலாங்குளம் மேம்பாலப் பகுதி. படம்; ஜெ .மனோகரன்

26 / 27

கோவை ராமநாதபுரம் - திருச்சி சாலையில் மேம்பாலப் பணியில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உயரத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள். படம் : ஜெ .மனோகரன்

27 / 27

சென்னையில் இன்று (27.6.2020) மாலை இரவும் பகலும் உரசும் அந்திப்பொழுதில்... மேகங்களுக்கு இடையே... கதிரவனின் ஒளிக் கீற்றில் உதித்த வண்ணக் கோலம், படம்: ம.பிரபு

Recently Added

More From This Category