Published on : 03 Jul 2024 18:47 pm

Cinema News in Pics: ‘கூலி’ பட ஷூட்டிங் முதல் ‘தி கோட்’ அப்டேட் வரை

Published on : 03 Jul 2024 18:47 pm

1 / 6
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இந்தப் படத்தின் அறிவிப்பு டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ப்ரீ - புரொடக்ஷன் பணிகள் தாமதம் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 5-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
2 / 6
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதன் அடுத்தக்கட்ட பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்றுள்ளார். அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவுக்கு முன் நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்து, “போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.
3 / 6
இணையத்தில் சத்யராஜின் மாஸான புது கெட்டப் ஒன்று வைரலாகி வருகிறது. வெள்ளை தலைமுடியும், பெப்பர் சால்ட் தாடியுடன் கூலிங் க்ளாஸ் என மாஸாக இருக்கிறார். இணையத்தில் வைரலாகும் இந்த புதிய தோற்றம் ரஜினியுடன் அவர் நடிக்கும் ‘கூலி’ படத்துக்காகவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
4 / 6
இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமையை பேசியது. இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் வெளியான 19 நாட்களில் ரூ.100.18 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 / 6
விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் பாண்டிராஜ். இந்தப் படத்தில் நடிக்க நித்யாமேனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
6 / 6
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நாளில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள விக்ரமின் ‘தங்கலான்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகும் என தெரிகிறது.

Recently Added

More From This Category

x