அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி திருமண நிச்சயதார்த்த ஆல்பம்
Published on : 28 Oct 2023 17:24 pm
1 / 6
நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார்.
2 / 6
இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.
3 / 6
உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார்.
4 / 6
இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் வெள்ள்ளிக்கிழமை நடந்தது.
5 / 6
சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
6 / 6
இந்த நிகழ்வில் இரண்டு குடும்பத்துக்கும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நடிகர் விஷால், இயக்குநர் சிறுத்தை சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட நண்பர்கள் கலந்துகொண்டனர்.