Published on : 25 Mar 2024 15:41 pm

தமிழிசை முதல் வித்யாராணி வரை | வேட்புமனு தாக்கல் - புகைப்படத் தொகுப்பு

Published on : 25 Mar 2024 15:41 pm

1 / 34
மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ஆர்.ரகு
2 / 34
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். படம்: ஆர்.ரகு
3 / 34
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் நீலகிரியில் போட்டியிடும் எல்.முருகன், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அண்ணாமலை. | படம்: சத்தியமூர்த்தி
4 / 34
அதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், வரும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடையாறு மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். | படம்: ஆர்.ரகு
5 / 34
மக்களவைத் தேர்தலில் தர்ம்புரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: பாஸ்கரன்
6 / 34
கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ஜி.ராமச்சந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: பெரியசாமி
7 / 34
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் போட்டியிடும் நெல்லை முபாரக் வேட்புமனு தாக்கல். | படம்: ஜி.கார்த்திகேயன்
8 / 34
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப.மாணிக்கம் தாகூர் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: மூர்த்தி. ஜி
9 / 34
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: மூர்த்தி.ஜி
10 / 34
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். | கார்த்திகேயன் ஜி
11 / 34
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ஷேக்மொஹிதீன்
12 / 34
நாகர்கோவில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
13 / 34
வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல். அருகில் அமைச்சர் துரைமுருகன். | படம்:வெங்கடாசலபதி
14 / 34
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பசுபதி வேட்புமனு தாக்கல். | படம்: வெங்கடாசலபதி
15 / 34
வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார். | படம்: வெங்கடாசலபதி
16 / 34
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
17 / 34
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி.
18 / 34
மதுரை மக்கவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
19 / 34
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அசோக்குமார், வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: கோவர்தன்.எம்
20 / 34
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணி வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: ராஜேஷ்
21 / 34
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஜான்சி ராணி வேட்புமனு தாக்கல். | படம்: ஷேக்மொஹிதீன்
22 / 34
ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்தார்.| படம்: கோவர்தன்
23 / 34
சேலம் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் பி. விக்னேஷ், வேட்புமனு தாக்கல். | படம்: லக்ஷ்மி நாராயணன்
24 / 34
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனு தாக்கல். | படம்: கார்த்திகேயன்
25 / 34
சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: லக்ஷ்மி நாராயணன்
26 / 34
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வேட்புமனு தாக்கல்.
27 / 34
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் ஐயுஎம்எல் வேட்பாளர் கே.நவாஸ் கனி வேட்புமனு தாக்கல். | படம்: எல்.பாலச்சந்தர்
28 / 34
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல். | படம்:எல்.பாலச்சந்தர்
29 / 34
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
30 / 34
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்புமனு தாக்கல்.
31 / 34
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். | படம்: எல்.பாலச்சந்தர்
32 / 34
நாம் தமிழர் கட்சியின் கோவை வேட்பாளர் எம்.கலாமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். | படம்: எம்.பெரியசாமி
33 / 34
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் வழங்கினார்.
34 / 34
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்தார். | மூர்த்தி. ஜி

Recently Added

More From This Category

x