Published on : 09 Mar 2024 14:23 pm

பிரதமர் மோடி யானை சவாரி @ காசிரங்கா | புகைப்படத் தொகுப்பு

Published on : 09 Mar 2024 14:23 pm

1 / 23

அசாமில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசியப் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். யானை சவாரியும் மேற்கொண்டார்.

2 / 23

காசிரங்கா தேசியப் பூங்காவைப் பார்வையிடுமாறும், அதன் இணையற்ற நிலப்பரப்புகளின் இணையற்ற அழகை அனுபவிக்குமாறும் மக்களை மோடி கேட்டுக்கொண்டார்.

3 / 23

இயற்கை பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணியில் உள்ள பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் கலந்துரையாடிய அவர், இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தைப் பாராட்டினார்.

4 / 23

லக்கிமை, பிரத்யும்னா மற்றும் பூல்மாய் யானைகளுக்கு கரும்பு வழங்கிய காட்சிகளையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.

5 / 23

“அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இருந்தேன். பசுமைக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கம்பீரமான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உட்பட பல்வேறு விலங்கினங்கள், தாவரங்களை கொண்டுள்ளது” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

6 / 23

“காசிரங்கா தேசிய பூங்காவைப் பார்வையிடவும், அதன் நிலப்பரப்புகளின் இணையற்ற அழகையும், அசாம் மக்களின் அரவணைப்பையும் அனுபவிக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று மோடி அழைப்பு விடுத்தார்.

7 / 23

“ஒவ்வொரு வருகையும் ஆன்மாவை வளப்படுத்தும் மற்றும் அசாமின் இதயத்துடன் உங்களை ஆழமாக இணைக்கும் இடம் இது” என்று பிரதமர் மோடி சிலாகித்துள்ளார்.

8 / 23

“நமது வனங்களையும் வனவிலங்குகளையும் தைரியமாக பாதுகாக்கும் முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பெண் வனக் காவலர்கள் குழுவான வான் துர்காவுடன் உரையாடினேன். நமது இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என்று மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார்

9 / 23

“லக்கிமை, பிரத்யும்னன், பூல்மாய் ஆகியவற்றுக்கு கரும்பு ஊட்டினேன். காசிரங்கா காண்டாமிருகங்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு ஏராளமான யானைகளும் உள்ளன, மேலும் பல உயிரினங்களும் உள்ளன” என்று மோடி கூறியுள்ளார்.

10 / 23
11 / 23
12 / 23
13 / 23
14 / 23
15 / 23
16 / 23
17 / 23
18 / 23
19 / 23
20 / 23
21 / 23
22 / 23
23 / 23

Recently Added

More From This Category

x