Published on : 24 Jan 2024 17:31 pm

மதுரை கீழக்கரை அரங்கத்தில் அனல் பறந்த முதல் ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு by எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published on : 24 Jan 2024 17:31 pm

1 / 52

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிக்கட்டு அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து காலை 11.10 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

2 / 52

ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையில் வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் சில நிமிடங்கள் போட்டியைக் கண்டு ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

3 / 52

500 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் களம் காண போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

4 / 52

இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. 2-வது பரிசு பெற்ற காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக், 50 ஆயிரம் ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்பட்டது.

5 / 52

போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.

6 / 52

5000 பேர் வரை போட்டியினை பார்வையிட ஏற்பாடுகள் உள்ள நிலையில், அதிகளவில் பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

7 / 52

பார்வையாளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. காளைகளுக்கு தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

8 / 52

கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்ததால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. மதுரை சரக டிஐஜி ரம்யா பாரதி தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன்உமேஷ் உட்பட 2200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

9 / 52
10 / 52
11 / 52
12 / 52
13 / 52
14 / 52
15 / 52
16 / 52
17 / 52
18 / 52
19 / 52
20 / 52
21 / 52
22 / 52
23 / 52
24 / 52
25 / 52
26 / 52
27 / 52
28 / 52
29 / 52
30 / 52
31 / 52
32 / 52
33 / 52
34 / 52
35 / 52
36 / 52
37 / 52
38 / 52
39 / 52
40 / 52
41 / 52
42 / 52
43 / 52
44 / 52
45 / 52
46 / 52
47 / 52
48 / 52
49 / 52
50 / 52
51 / 52
52 / 52

Recently Added

More From This Category

x