Published on : 06 Dec 2023 08:49 am

மீள்கிறது தலைநகர் சென்னை - புகைப்படத் தொகுப்பு

Published on : 06 Dec 2023 08:49 am

1 / 14

புயல்களின் பெயர்தான் மாறுகிறதே தவிர, பாதிப்புகள் மாறுவதில்லை. மரம், மின்கம்பம் சாய்வது, பல மணி நேர மின்தடை, சாலையெங்கும் வெள்ளம், வீடுகளில் மழைநீர் என, புயல் வரும்போதெல்லாம் பாதிக்கப்படுகிறது சென்னை. இதனால், தலைநகரமும், புறநகர் பகுதிகளும் ஸ்தம்பிக்கின்றன. தேசிய, மாநில அரசு இயந்திரங்கள் தீவிரமாக களமிறங்கி, மீட்பு, நிவாரணப் பணிகளில் துரிதமாக ஈடுபட, அதே வேகத்தில் சகஜ நிலைக்கு திரும்பிவிடுகின்றனர் மக்கள். ‘மிக்ஜாம்’ பாதிப்புகளில் இருந்தும் அதேபோல மீளத் தொடங்கியிருக்கிறது சென்னை. சென்னை தாம்பரம் வரதராஜபுரம் அடுத்த மதனபுரம் சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பழுதான கார், வேன் ஆகியவை ஆங்காங்கே நிற்கின்றன. மக்கள் தங்கள் உடமைகளுடன் நிவாரண முகாம்களுக்கு செல்கின்றனர். தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள் படகு மூலம் மீட்டு அழைத்து வரப்படுகின்றனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

2 / 14

வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளம் வடியவில்லை. உடமைகளுடன் அப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள். | படங்கள்: ம.பிரபு |

3 / 14

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படை தளத்தின் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

4 / 14

பழைய பெருங்களத்தூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் செல்லும் மக்கள்.

5 / 14

கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் நேற்றும் வெள்ளநீர் வடியாமல் தேங்கியுள்ளது. தனியார் பேருந்து பழுதாகி நிற்கிறது. மாடுகள் வெள்ளநீரில் மூழ்கி குளிக்கின்றன.

6 / 14

தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் டோல்கேட் அருகே வாகனங்களை சூழ்ந்துள்ள வெள்ளம். ஒரு கார் வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது.

7 / 14

தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக படகில் உணவு, தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்கின்றனர்.

8 / 14

வில்லிவாக்கம் - கொளத்தூர் செல்லும் ரயில்வே சுரங்கப் பாதை முழுவதும் மூழ்கியுள்ளது வெள்ளநீரில் நீச்சலடித்து குளித்து மகிழும் சிறுவர்கள், இளைஞர்கள்.

9 / 14

அரும்பாக்கம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் ரப்பர் மிதவையில் மிதந்து விளையாடும் சிறுவர்கள்.

10 / 14

கொரட்டூர் வடக்கு அவென்யூ சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படாமல் உள்ளது. பின்னால் உள்ள விளம்பர பலகையை பார்க்க வேண்டாம். | படம்: எஸ்.சத்தியசீலன் |

11 / 14

முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் செல்லும் ராணுவ வீரர்கள்.

12 / 14

மேற்கு தாம்பரம் சிடிஓ காலனியில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு சிக்கியவர்களை மீட்டு அழைத்து வரும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

13 / 14

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து ஒருவரை மீட்டு வரும் வீரர்.

14 / 14

மடிப்பாக்கம் ராம் நகர், பெரியார் நகர், கொளத்தூரில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுவர ரப்பர் படகுகளில் செல்லும் கடற்படை வீரர்கள்.

Recently Added

More From This Category

x