Published on : 13 May 2020 14:24 pm

பேசும் படங்கள்... (13.05.2020)

Published on : 13 May 2020 14:24 pm

1 / 43

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். கடந்த 50 நாட்களாக கரோனா தடுப்பு நடவடிக்கையால் தொழிலின்றி வாழ்வாதாரம் கெட்டு முடங்கிப் போயிருந்த அந்த தொழிலாளர்களை மீட்டு வந்த தமிழக அரசு கரோனா தொற்று பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் தங்க வைத்துள்ளது. இந்தத் தொற்று பரிசோதனையின் முடிவுகள் தெரிந்ததும் அவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக அரசு அதிகாரிகள் கூறினர். படங்கள்: மு. லெட்சுமி அருண்.

2 / 43
3 / 43

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் - உழைக்க வேண்டும்... என்கிற எண்ணத்தோடு... பிழைப்பையும் உழைப்பையும் நம்பி... வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகம் வந்து கடுமையாக உழைத்து வந்தனர் - ஆனால் - கரோனா அச்சத்தால் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்துவிட்டது. மனதளவிலும் பொருளாதார நிலையிலும் பாதிக்கப்பட்ட அந்த தொழிலாளர்கள்... சொந்த மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து 4 ரயில்களில் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்

4 / 43
5 / 43
6 / 43
7 / 43

தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அழகு நிலையங்கள் நடத்துவோர்... மீண்டும் அழகு நிலையங்களை (பியூட்டி பார்லர்கள்) திறக்க அனுமதி அளிக்கக் கோரி..., வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். படம்: வி.எம்.மணிநாதன்

8 / 43

சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நேற்று சிவகாமி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. படங்கள்: வி.எம்.மணிநாதன்

9 / 43
10 / 43

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் முடங்கிய வட மாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலத்துக்கு செல்வதற்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்லவி்ரும்பும் தொழிலாளர்களுக்கு பதிவு செய்து கொண்டு இ-பாஸ் வழங்க வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ-பாஸ் வாங்க முன் கூட்டியே வந்து காத்திருக்கும் தொழிலாளர்கள் நடந்து வந்த அசதியில் தூங்குகின்றனர். படம்: வி.எம்.மணிநாதன்.

11 / 43

சொந்த மாநிலத்துக்கு திரும்ப நினைத்து திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வந்தும் சரியான தகவல்களை கொடுக்காத ஸ்ரீவைகுண்டத்தில் வேலை பார்த்துவந்த பிஹாரியைச் சேர்ந்த தொழிலாளர்களை ஸ்ரீவைகுண்டத்துக்கே போலீஸார் திருப்பி அனுப்பி வைத்தனர். படம்: மு. லெட்சுமி அருண்

12 / 43

கூடங்குளம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை அவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது . அதற்காக அந்த பகுதி முழுவதிலும் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல் வேறு சோதனைகளுக்கு பிறகே வாகனங்கள் ரயில்நிலைய பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டன. படம்: மு. லெட்சுமி அருண்

13 / 43

மேளம் தட்டி கோரிக்கை முழக்கம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக - ஊரடங்கு அமலில் இருப்பதால் - நாட்டுப்புற நையாண்டி மேளக் கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்றுக் காணப்படுகின்றனர். சேலம் - அம்மாப்பேட்டைப் பகுதியில் வசிக்கும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள்... தங்கள் கலை வாத்திய கருவிகளான நாதஸ்வரம் மற்றும் மேளங்களை இசைத்து - தங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். படம் :எஸ்.குரு பிரசாத்

14 / 43
15 / 43
16 / 43

கத்திரி வெயிலின் பாதிப்பால் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. புதுச்சேரியில் நேற்றுல் திடீர் மழையினால் குளிர்ந்த நிலையில் கரு மேக மூட்டத்துடன் அழகிய தோற்றமளித்த ஆகாயம். படம்: எம்.சாம்ராஜ்

17 / 43

.கரோனா பாதிப்பையடுத்து புதுச்சேரி அரசு அனைத்து ரேஷன் அட்டை தார்களுக்கும் இழப்பீட்டு தொகையை வங்கி மூலம் செலுத்தியது. புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியொன்றில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நிற்கும் பொதுமக்கள். படம்: எம்.சாம்ராஜ்

18 / 43

58 வயது பணி ஓய்வு காலத்தை 59 வயதாக்கியது இளைஞர்களின் வேலைவாய்ப்பை கெடுக்கும் தமிழக அரசின் செயல் என்றும், 8 மணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற மத்திய அரசு திட்டமிடுவது தொழிலாளர்கள் நல சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறி... மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வயிற்றில் ஈரத்துணி கட்டி கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

19 / 43

மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி தலைமையில் இந்த தொகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நலிவடைந்த பொதுமக்களுக்கு நேற்று நிவாரண பொருட்க வழங்கப்பட்டன. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

20 / 43

சாணை பிடிக்கலையோ..சாணை: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் உள்ள ஊரடங்கு... சில கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்டதால் கடந்த 47 நாட்களுக்குப் பிறகு நேற்று - சாணை பிடிக்கும் தங்களின் தொழிலை தொடங்கிய தொழிலாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன்

21 / 43
22 / 43

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லி... மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் நந்தினி உயர் நீதிமன்றம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை - புதூர் பகுதியில் உள்ள நந்தினியின் வீட்டுக்கே சென்று அவரை போலீஸார் கைது செய்தனர். படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி

23 / 43

முன்பெல்லாம் சென்னையின் சால்லையோரங்களில் பார்த்தால் ஹெல்மெட், கூலிங் கிளாஸ் என வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள். இப்போது கரோனா அச்சத்தில் தேவை கூடிப்போன முக்கவசங்களை விற்க தொடங்கியுள்ளனர். இந்த முகக்கவசங்கள் பருத்தியிலானவை, நைலான் வகைகள், பாலியெஸ்டர் என பல வகைகளில் விற்கப்படுகின்றன. இவை - 20 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையில் உள்ளன. ''முகக்கவசம் போடாவிட்டால் போலீஸார் அபராதம் விதிப்பதால் முகக்கவச விற்பனை அமோகம்’’ என்கிறார் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் முகக்கவசம் விற்கும் திடீர் முகக்கவச வியாபாரி. படம்:எம்.முத்து கணேஷ்

24 / 43

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய நீர்வளத்துறையின் கீழ் ஒரு பிரிவாக மாற்றியதை கண்டித்து, திருச்சி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுநல அமைப்பினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்.

25 / 43

திருச்சி என்.எஸ்.பி சாலையில் இன்று பெரியக்கடைகளை திறக்க போலீஸார் அனுமதித்தைப் போல எங்களையும் கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என இப் பகுதியில் தரைக்கடை போட்டிருக்கும் வியாபாரிகள்... கோரிக்கை வைத்ததுடன்... இன்று காலையில் தடையை மீறி கடையைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் கடையை திறக்க முடியாமல் போலீஸார் தடுத்துவிட்டதால் திருச்சி என்.எஸ்.பி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

26 / 43

திருச்சி என்.எஸ்.பி சாலையில் இன்று பெரியக்கடைகளை திறக்க போலீஸார் அனுமதித்தைப் போல எங்களையும் கடை திறக்க அனுமதிக்க வேண்டும் என இப்பகுதியில் தரைக்கடை போட்டிருக்கும் வியாபாரிகள்... கோரிக்கை வைத்ததுடன்... இன்று காலையில் தடையை மீறி கடையைத் திறக்க முயற்சித்தனர். மேலும் தினமும் இரவு 7 மணி வரையில் கடைகளை சிறிய, பெரிய கடைகளை திறந்து வைத்திருக்கலாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ள நிலையில் - நேற்று இரவு 8 மணி வரையில் தங்கள் சிறிய, பெரிய கடைக்காரர்கள் தங்கள் கடைகளை உத்தரவை மீறி திறந்து வைத்திருந்ததாலும் மாவட்ட நிர்வாகம் மறு உத்தரவிடும் வரையில் பெரிய, சிறிய, தரைக்கடைக்காரர்கள் எவரும் கடைகளை திறக்கக்கூடாது என இன்று போலீஸார் தடுத்ததால் - திருச்சி என்.எஸ்.பி சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: ஜி.ஞானவேல்முருகன்.

27 / 43

திருச்சி என்.எஸ்.பி சாலையில் இன்று காலையில் திறக்கப்பட்ட கடைகளை போலீஸார் அடைக்க கூறியதும் மூடிய கடைக்கு முன் காத்திருந்த தொழிலாளர்கள். படம்: ஜி.ஞானவேல்முருகன்

28 / 43

ஊரடங்கு சில கட்டுபாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்து பொதுமக்களிடம்விழிப்புணவூட்டும் வகையில் வேலூரில் பல பகுதிகளில் சுற்றி வரும் கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஆட்டோ. படம்: வி.எம்.மணிநாதன்

29 / 43

கோவை காந்திபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் இன்று - தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் அனைவரும் - பேருந்துகள் மூலம் கோவை ரயில் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். சொந்த மாநிலத்துக்கு செல்லும் மகிழ்ச்சியில் பேருந்தில் இருந்தபடி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். படம் :ஜெ மனோகரன்

30 / 43

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் -தனது தள்ளுவண்டியில் வைத்து காய்கறி விற்ற தனது பிழைப்பு முடங்கிப்போனதால்.... சிறு வியாபாரி கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த ராஜேந்திரன்... தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு நாள் வாடகை 300 ரூபாய் என ஆட்டோ வாடகைக்கு எடுத்து நடமாடும் காலணிக்கடை நடத்தி வருகிறார். படம் :ஜெ மனோகரன்

31 / 43

கோவை காட்டூர் என்டிசி தலைமையகத்தில் ஊரடங்கு கால ஊதியம் கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாலை தொழிலாளர்கள். படம்: ஜெ.மனோகரன்

32 / 43

கோவையில் ஊரடங்கில் சிக்கிக்கொண்ட வட மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி கேட்டு... கோவை சிங்காநல்லுர் உப்பிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பிஸ்கெட்டுகளை கோவை போலீஸார் வழங்கினர். படம் :ஜெ .மனோகரன்

33 / 43

பறவைகளை... காற்றின் தூதுவர்கள். பறக்கும் புன்னகைகள். கடவுளின் உரையாடல் என... சர்க்கரை மொழியால் எழுதிக்கொண்டே போகலாம். எப்படி எழுதினாலும் அந்த வாக்கியங்களின் மீது வந்து அமர்ந்துவிடும் பறவைகள். அப்படியான பறவைகள்...உ யர் அழுத்த மின் கம்பி மீது அமர்ந்து அந்தி பொழுதை பறந்து ரசிக்கின்றதோ ? படம்: வி.எம்.மணிநாதன்

34 / 43
35 / 43
36 / 43

என்ன அழகு... எத்தன அழகு: எப்போதாவது பெய்கிற ஆலங்கட்டி மழை மாதிரி.... எப்போதாவது தோன்றுகிற வானவில் மாதிரி... எப்போதாவது வந்துபோகிற அழகின் திருவிழா மாதிரி... சட்டென்று சில காட்சிகள் கண் முன் தோன்றிவிடும். அப்படித்தான் நேற்று கேமரா சுமந்து சென்ற என் விழியில் விழுந்து இதயம் நுழைந்தது இந்தக் காட்சி. வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியப்படி குதிரைக்கு பயிற்சி அளிக்கும் இளைஞர்கள். படம்: வி.எம்.மணிநாதன்

37 / 43

வியர்வை வேதம்: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக - 50 நாட்களாக தமிழகம் முழுதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் - பல தொழில்களும், அதில் ஈடுபட்ட உழைப்பாளர்களின் வாழ்வாதாரமும் முடங்கின. கடந்த சில நாட்களுக்கு முன்னால் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் - மீண்டும் பல தொழில்கள் தொடங்க ஆரம்பித்தன. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில்... 50 நாட்களுக்கு முன்பு பாதியில் விடப்பட்ட... செங்கல் தயாரிப்பு பணிகளில் மீண்டும் உற்சாகத்துடன் ஈடுபடும் உழைப்பாளிகள். படங்கள்: பு.க.பிரவீன்

38 / 43
39 / 43
40 / 43
41 / 43

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பிஹாரைச் சேர்ந்த 1,200 தொழிலாளர்களை... அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க... அரசு சார்பில் கணக்கெடுப்பு மற்றும் உடல் வெப்ப அளவு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. படங்கள்: ம.பிரபு

42 / 43
43 / 43

Recently Added

More From This Category

x