Published on : 16 Jan 2023 17:13 pm
நலம் பல தரும் கொய்யாப்பழம்! - உடல் எடையைக் குறைக்க மிகவும் ஏற்றது கொய்யா. உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள் இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது.
பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால், கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
கொய்யாப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுகள் மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவுகின்றன.
உடலுக்குள் இருக்கும் நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கிறது கொய்யா.
தினமும் ஒரு கொய்யாப் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகரிக்கும்.