Published on : 29 Apr 2020 22:17 pm

இன்றைய ( 29.04.2020) புகைப்பட செய்திகள்

Published on : 29 Apr 2020 22:17 pm

1 / 75

இன்று உலக நடனம் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பல ஆண்டுகாலமாக வருடந்தோறும் பள்ளி மாணவ மாணவர்களுக்கு இலவச நடன மற்றும் கலை சார்ந்த இலவச பயிற்சி முகாம் நடைபெறும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வெறிச்சோடி காணப்படும் காந்தி மியூசியம்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

2 / 75
3 / 75
4 / 75
5 / 75

அந்திசாயும் வேளையில் ரயில்வே தண்டவாளத்தில் சூரியனின் ஒளி பட்டு பிரதிபலிக்கிறது . இடம்.ரயில்வே நிலையம் , புதுச்சேரி. படம்.எம்.சாம்ராஜ்

6 / 75

ஊரேல்லம் தடை உத்தரவால் முடங்கி கிடக்கிறது. ஆனால் ஏழை எளியவர்கள், கூலி வேலை செய்பவர்கள் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. வீட்டில் அடுப்பு எரிக்க விறகை தலையில் துாக்கி செல்லும் மூதாட்டி. இடம். தேங்காய்திட்டு சாலை உப்பளம் புதுச்சேரி. படம்.எம்.சாம்ராஜ்

7 / 75

ஆள் நடமாட்டம் இல்லை ஜாலியான ஒரு குளியல் காக்கைகள்....நேற்றிரவு (ஏப்ரல் 28) பெய்த மழை நீரில் குளியல் போடும் காக்கை கூட்டம். படம்.எம்.சாம்ராஜ்

8 / 75
9 / 75
10 / 75

இந்த கரோனா ஊரடங்கு தடை காலத்தில் விவசாய தொழிலுக்கு விலக்கு அளித்த அரசு உத்தரவை அடுத்து உற்சாகமாக களத்தில் விவசாய பணிபுரியும் தொழிலாளர்களை பார்க்கலாம் என சென்ற போது முதலில் பார்த்தது உப்பளம்.

11 / 75

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என பழமொழியில் ஆரம்பித்து சோத்துக்கு உப்பு போட்டுதான் சாப்பிடுரையா என ரோஷத்திற்கு உதாரணமாகவும் என பல வழிகளில் பயன்படும் விஷயங்களை உள்ளடக்கியது உப்பு. வீடுவந்து சேரும் வரை எத்தனை மனிதர் உழைப்பு இருக்கிறது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

12 / 75

சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பாலாற்றின் முக துவாரப் பகுதியில் உள்ளது மரக்காணம். இங்கு உப்பு விவசாயத்தை நம்பியே பல குடும்பங்கள் உள்ளன.

13 / 75

பெரும்பாலும் காலை நேரத்திலே தான் ஆட்கள் வேலை செய்கிறார்கள். உப்பிற்கான காலமே கோடை காலம் தான் அப்போது தான் உப்பு அதிக அளவில் அறுவடை செய்யப்படுகிறது. மரக்காணத்தில் மாலை நேரங்களில் கடல் நீர் உட்புகும் பகுதியில் நீரைத்தேக்கி வெயிலில் ஆவியாதல் மூலம் உப்பு அறுவடை செய்யப்படுகிறது.

14 / 75
15 / 75

பங்குனி,சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மரப்பலகைகளால் கடல் நீர் தேக்கிவைக்கப்பட்ட பகுதிகளில் உருவாகும் உப்பை சிறிது சிறிதாக சேகரித்து பெரிய பாத்திரங்கள் மூலம் மேட்டுபகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு மூட்டைகளாகவோ, உப்பு மில்களுக்கு அப்படியே லாரியில் கொட்டி எடுத்து செல்லப்படுகிறது.

16 / 75
17 / 75
18 / 75
19 / 75

ஒரு மூட்டை உப்பு 160 ரூபாய் 70-திலிருந்து 80 கிலோ வரை இருக்கும். உப்பளங்களில் வேலை செய்வோர்கள் செருப்பு கூட அணிவதில்லை காரணம் உப்பு செல்வத்தின் அடையாளமாம். உப்பின் பயன்பாட்டால் தான் விலங்குகளிலிருந்து மனிதன் மேம்பட காரணம் என பெருமையாக.. பல விஷயங்களை கூறுகிறார்கள்.

20 / 75
21 / 75
22 / 75

உப்பு மூட்டைகளை தூக்கும் போது ஒரு உப்பு சாக்கில் ஒட்டியிருந்தால் கூட முதுகை அறுத்துவிடும், வைரம் போன்ற தன்மையுடையது என அவர்கள் சிரமத்தையும் கூறுகிறார்கள். இந்த உப்பள தொழிலாளர்களின் ஒரு நாள் கூலி 200லிருந்து 300 ரூபாயாம் .இப்படி உப்பிலும், உப்பு காற்றிலும் ஊறி கறுத்து போய் உற்சாக பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஒரு சபாஷ் சொல்லலாமே. - படங்கள்,தகவல் : எம்.முத்துகணேஷ்

23 / 75

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் அறிகுறி உள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்ய கோவிட் 19' நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

24 / 75

144 தடை உத்தரவை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் உணவின்றி இருப்பதாக தெரிவித்தார்கள். இதை அடுத்து மதுரை வடக்கு தாசில்தார் சுரேஷ் அவர்கள் வர 25 நபர்களுக்கு குடும்பத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுத்து அனுப்பினார்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

25 / 75

கோவிட் 19' புற்றுநோய் தொடர்பான மதுரை தெற்குவாசல் பி4 காவல் நிலைத்தில் போலீசாருக்கு அறிகுறி ஏற்பட்டதால் கடந்த வாரம் காவல் நிலையம் முற்றிலும் மூடப்பட்டது. தற்சமயம் ஒரு சில தினங்களுக்குள் காவல்நிலையத்தில் மிக சிறப்பான ஹோமம் மற்றும் பூஜைகள் பொங்கல் வைத்து திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்! படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

26 / 75
27 / 75

சேலத்தில் 4 நாட்கள் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு நிறைவடைந்ததை அடுத்து நேற்று (ஏப்ரல் 28) அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளில் குவிந்தனர். இதனால் சேலம் பால் மார்க்கெட் , புதிய பேருந்து நிலைய தற்காலிக உழவர் சந்தை பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் குவிந்திருந்த பொது மக்கள். படம் எஸ்.குரு பிரசாத்

28 / 75
29 / 75
30 / 75
31 / 75

பணவடலி சத்திரத்தில் உள்ள விவசாய நிலத்தில் சமூக இடைவெளியில் நிலக்கடலை அறுவடை செய்யும் விவசாய பெண்கள்! படங்கள் : மு. லெட்சுமி அருண்

32 / 75
33 / 75
34 / 75

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சட்டசபை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்! படம் எம்.சாம்ராஜ்

35 / 75
36 / 75
37 / 75

பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிகளுக்கு வந்த பொதுமக்களிடம் அனுமதி அட்டை இருக்கிறதா என்று சோதனை செய்யும் அதிகாரிகள் .. பொதுமக்கள் அதிகமாக வெளியே வருவதை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சோதனை செய்தனர் அதிகாரிகள்! படங்கள் : மு. லெட்சுமி அருண் .

38 / 75
39 / 75
40 / 75

தாம்பரம் ரயில்வே நிலையம் முகப்புத் தோற்றத்தில் கரோனா எதிர்ப்புப் போராளிகள் என மருத்துவர்களையும் போலீசாரையும் சித்தரித்து தென்னக ரயில்வேயும் ரெனால்ட்-நிசான் தொழில்நுட்ப பிசினஸ் டெக்னாலஜி இந்தியா கம்பெனியும் இணைந்து டிஜிட்டல் ஸ்டிக்கர் மூலமாக உருவான வைரஸ் விழிப்புணர்வு செய்தனர். படங்கள் எம்.முத்து கணேஷ்

41 / 75
42 / 75

கோவையில்   முழு ஊரடங்கையொட்டி 4 வது நாளாக வெறிச்சோடி காணப்படும் காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் .படம் :ஜெ மனோகரன்

43 / 75
44 / 75

முழு ஊரடங்கு ஊரடங்கையொட்டி கோவை ஜீபீ சிக்னல் அருகே உணவு பொட்டலங்களை வாகனங்கள் மூலம் கொண்டுவந்து சாலையோரங்களில்  இருப்போர்களுக்கு உணவுகளை வழங்கும்  சேவா பாரதி அமைப்பினர்! படம் ஜெ மனோகரன்.

45 / 75
46 / 75

முழு ஊரடங்கு ஊரடங்கையொட்டி கோவை ராம்நகர் பகுதியில்  நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள்  மூலம்  காய்க்கறி வாங்கும் பொதுமக்கள்! படம் :ஜெ மனோகரன்

47 / 75
48 / 75
49 / 75

முழு ஊரடங்கு ஊரடங்கையொட்டி கோவை ரெட்பில்டு காமராஜர் சாலையை  சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள். படம் :ஜெ மனோகரன்

50 / 75

கோவிட் 19' தொற்றுநோய் காரணமாக மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் முகப்புக்கு முன்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது படம் எஸ் கிருஷ்ணமூர்த்தி

51 / 75

மதுரை கீழகுயில் குடி பகுதியில் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்! படம். க. ஸ்ரீ பரத்

52 / 75
53 / 75
54 / 75

கோடையிலும் நிறைந்து காணப்படும் விருதுநகர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் படம். க. ஸ்ரீபரத்

55 / 75
56 / 75
57 / 75

திருச்சியை அடுத்த வயலூர், எட்டரை, குழுமணி, கோப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மலர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மல்லிகை, செவ்வந்தி மலர்களை சாகுபடி செய்த விவசாயிகள் ஊரடங்கு காரணமாக அவற்றை விற்பனை செய்ய வழியின்றி தவித்து வந்தனர். தற்போது சில நாட்களாக காய்கறி வாகனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது போல் மலர்களை எடுத்து செல்லவும் வேளாண் துறை அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். இதனால் செடிகளிலேயே காய்ந்து கருகி வந்த செவ்வந்தி மலர்களை பறிக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது வேலை வாய்ப்பின்றி இருந்த கிராம பெண்களுக்கு பயனாக உள்ளது. மல்லிகை பூ கிலோ 75 ரூபாய்க்கும், செவ்வந்தி 50 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகவில்லை என்றாலும், செடியிலேயே வீணாவது தவிர்க்கப்படுவதுடன் வேலைக்கு வருபவர்களுக்கு கூலியாவது கிடைக்கிறது என்கின்றனர். - படம், தகவல்:ஜி.ஞானவேல்முருகன்.

58 / 75
59 / 75
60 / 75

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம்.

61 / 75
62 / 75

வெறிச்சோடிக் கிடக்கும் திருச்சி நம்பர் 1 டோல்கேட் சந்திப்பு மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை. - படம்: ஜி.ஞானவேல்முருகன்.

63 / 75

ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் செம்பாக்கம் முதல் பல்லாவரம் வரை சாலையை காணலாம்! படங்கள்: ஸ்டாலின்

64 / 75
65 / 75

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் சுற்றியவர்களிடம் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வேலூர் அண்ணா சாலை திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்.

66 / 75
67 / 75

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை. இடம். வேலூர் அடுத்த பொய்கை. படம்: வி.எம்.மணிநாதன்.

68 / 75
69 / 75

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவாசிய தேவைக்காக, திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்வு தொடர்பாக வெளியூர்களுக்கு செல்ல வாகன அனுமதி பதிவு சீட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வாகன அனுமதி சீட்டு வழங்குவது நடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டு, அரசு அலுவலர்கள் தவிர, பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் வருவதற்கு தடை செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடப்பட்டுள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்.

70 / 75
71 / 75

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காட்பாடியில் மருந்து கடையில் கிருமி நாசினி மருந்து தெளித்த மாநகராட்சி தூய்மை பணியாளர். படம்: வி.எம்.மணிநாதன்.

72 / 75

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் கூடுவதை தவிர்க்க காட்பாடி டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக உழவர் சந்தை அமைக்கப்பட்டு நடைப்பெற்று வந்தது. இந்நிலையில், வேலூரில் நேற்று அதிகாலை பெய்த மழையினால் தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்ட மைதானத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் மாவட்ட நிர்வாகத்தினர் அருகில் உள்ள மைதானத்தில் உழவர் சந்தையை மாற்றி அமைத்தனர். இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். படம்: வி.எம்.மணிநாதன்.

73 / 75
74 / 75
75 / 75

Recently Added

More From This Category

x