வீழ்ச்சி காணும் ரூபாய் மதிப்பு: விலைவாசி இனி..? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், நாட்டில் விலைவாசி மேலும் கடுமையாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அமெரிக்க டாலரில் வாங்கப்படுவதால், ரூபாயின் மதிப்பு பலவீனமடையும்போது இறக்குமதிச் செலவு மேலும் அதிகரிக்கிறது.
ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதன் காரணமாக கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெரிய அளவில் உயரும். இதனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சார்ந்துள்ள அனைத்துப் பொருட்களின் விலையும் நாட்டில் கடுமையாக உயர வழிவகுக்கும். நாட்டின் பொருளாதாரம் மீது அழுத்தத்தை உருவாக்குவதுடன், மக்களின் மீதான சுமையையும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணிகளையும், தாக்கத்தையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.