தமிழக பாஜக 2.0 திட்டம்: அண்ணாமலை என்ட்ரி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தேர்தல் தோல்விக்கான காரணத்தைத் தேடி மற்ற கட்சிகள் சுயபரிசோதனையில் சுறுசுறுப்பாகிவிட்ட நிலையில், மத்தியில் ஆளும் பாஜக மூச்சுவிடாமல் இருக்கிறது. அந்தளவுக்கு, தமிழகத்தில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி.
இதனிடையே, அண்ணாமலையை மாற்றிய விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் அமித் ஷா தரப்புக்கும் அண்மையில் சூடான விவாதங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தோல்விக்கான காரணங்கள் குறித்து தமிழக பாஜக தலைகளிடம் தனித்தனியே அமித் ஷா கடிதம் கேட்டிருப்பதாகவும் ஒரு தகவல்.
“தமிழக பாஜக-வை இனி நான் பார்த்துக் கொள்கிறேன் என பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் சொல்லி இருப்பது மீண்டும் அண்ணாமலை வரலாம் என்கிற ஆவலை அவரது விசுவாசிகள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.