பஞ்சாப் தேர்தல் களமும் போதைப்பொருள் பிரச்சினையும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
பஞ்சாப் மாநிலம் இன்று தன் சொந்தப் பிள்ளைகளைப் போதைப்பொருளுக்குப் பலிகொடுத்து கண்ணீரில் மூழ்கியுள்ளது. பஞ்சாபை பொறுத்தவரை போதைப்பொருள் என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. அது ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சியாளர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கிய அரசியல் காரணியாகவும் உருவெடுத்துள்ளது. தெருக்கள்தோறும் திறக்கப்படும் மறுவாழ்வு மையங்களும், போதைக்கு அடிமையாகி மாண்டுபோகும் இளைஞர்களுமே மாநிலத்தின் ஆறாத துயர் வடுக்களாக மாறியுள்ளனர்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 2027 பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், “எங்கள் வீட்டின் இளைஞர்களை எந்தக் கட்சி காப்பாற்றும்?” என்ற பெண்களின் அழுகுரல் பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும் எதிரொலிக்கிறது. இதன் பின்னணியை முழுமையாக அலசுகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.