5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...

5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...
Updated on: 
2 min read

நாகப்பட்டினம்: அம்​பாசமுத்​திரம் தொகுதி இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடப் போவ​தாக அறி​வித்​திருக்​கும் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், தன்னை பொது வேட்​பாளராக அறி​விக்க வேண்​டும் என்​கிற தொனி​யில் பேசி​யிருந்​தார். ஆனால், அதற்கு அதிமுக, திமுக கட்​சிகள் சார்​பில் பெரிதாக எதிர்​வினை இல்​லாத நிலை​யில் 5 தொகுதி இடைத்​தேர்​தலில் தவெகவுக்கு எதிராக பொது வேட்​பாளரை நிறுத்​து​வது சாத்​தி​யம் தானா? என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

2026 சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தவெக பெற்ற 34.92 சதவீத வாக்​கு​களும், அண்​மையில் நடை​பெற்ற இடைத்​தேர்​தலில் 2 தொகுதி​களை​யும் தவெக கைப்​பற்​றியதும், தற்​போது அக்​கட்​சியை எதிர்த்து பொது வேட்​பாளர் நிறுத்​தப்​பட வேண்​டும் என்​கிற யோசனை வரு​வதற்கு காரண​மாக உள்​ளது. எனினும் தவெகவுக்கு எதிராக சுமார் 65 சதவீத வாக்​கு​கள் உள்​ள​தால் தவெக-வை வீழ்த்த மற்ற கட்​சிகள் ஒன்​றிணைய வேண்​டும் என்ற கருத்து முன் வைக்​கப்​படு​கிறது.

கடந்த பொதுத் தேர்​தலில் திமுக தனித்து 24.19 சதவீத வாக்​கு​களை​யும், கூட்​ட​ணி​யுடன் சேர்த்து 31.40 சதவீத வாக்​கு​களை​யும் பெற்​றது. அதிமுக தனித்து 21.21 சதவீத வாக்​கு​களை​யும், கூட்​ட​ணி​யுடன் சேர்த்து 27.21 சதவீத வாக்​கு​களை​யும் பெற்​றது. நாதக தனித்​துப் போட்​டி​யிட்டு 4.02 சதவீத வாக்​கு​களைப் பெற்​றது. இந்த வாக்​கு​களை ஒன்​றிணைந்​தால் தவெகவை எளி​தில் வீழ்த்தி விட முடியும் என்​பது அரசி​யல் கணிப்​பாளர்​களின் கணக்கு.

அதாவது திமுக, அதிமுக தனித்து பெற்ற வாக்​கு​களு​டன் நாதக பெற்ற வாக்​கு​களை​யும் இணைத்​தால் 49.42 சதவீதம் ஆகிறது. அத்​துடன் ஆட்​சிக்கு எதிரான அதிருப்தி வாக்​கு​களை​யும் சேர்த்​தால் சுமார் 55 சதவீத வாக்​கு​களை பெற்று விடலாம் என்று கணக்​கிடப்​படு​கிறது. இதுவே பொது வேட்​பாளர் சிந்​தனைக்கு மூலமாக இருக்​கிறது. ஆனால் இது நடைமுறை​யில் சாத்​தி​யமா என்​றால், அண்​மைக்​கால இடைத்​தேர்​தல் வரலாற்றை பார்த்​தால் அதற்கு வாய்ப்​பில்லை என்றே சொல்​கிறார்​கள்.

இதற்கு முன் 2002-ல் நடை​பெற்ற ஆண்​டிப்​பட்டி இடைத்​தேர்​தலில் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்​பாளர் நிறுத்​தப்​பட வேண்​டும் என்ற கருத்து முன் வைக்​கப்​பட்​டது. ஆனால் அது நடை​பெறவில்லை.

2015-ம் ஆண்டு நடை​பெற்ற ஆர்.கே.நகர் இடைத்​தேர்​தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக போட்​டி​யிடா​மல் ஒதுங்​கிக் கொண்​டதே தவிர, அப்​போதும் பொது வேட்​பாளர் நிறுத்​தப்​பட​வில்லை.

தற்​போதைய இடைத்​தேர்​தலில் திமுகவும், அதிமுகவும் தங்​களுக்​கான சொந்த செல்​வாக்கு எவ்​வளவு என்​பதை நிலை நிறுத்​தவே விரும்​பு​கின்​றன.

அது மட்​டுமில்​லாமல் திமுகவும், அதிமுகவும் கூட்​டணி வைத்து தவெக ஆட்​சியை கவிழ்க்க முயல்​கின்​றன என்று தவெக தொடர்ந்து கூறிவரும் நிலை​யில், பொது வேட்​பாளர் நிறுத்​தப்​பட்​டால் அவர்​கள் சொல்​வது உண்​மையாகி விடும் என்​கிற நிலையை உரு​வாக்க அக்​கட்​சிகள் விரும்​பவில்லை. திமுக, அதிமுக கூட்​டணி சேர்ந்​தால்​தான் தவெகவை எதிர்க்க முடியும் என்​கிற நிலை உரு​வாவதையும் இரு கட்​சிகளும் விரும்​பவில்லை.

ஒரு​வேளை சீமான் நிபந்​தனை​யின்றி திமுகவை ஆதரித்​தால், அவரை அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளராக களம் இறக்க வாய்ப்பு உள்​ளது. மற்​றபடி 5 தொகுதி​களி​லும் பொது வேட்​பாளர் என்ற நிலைக்கு தற்​போது வாய்ப்​பில்லை என்​கின்​றனர் அரசி​யல் நோக்கர்கள்.

5 தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்? - கணக்கில் சாத்தியம்... களத்தில் சிக்கல்...
தவெகவின் 6 மாத கால ஆட்சி எப்படி? - ஒரு விரைவுப் பார்வை

X