ஈரான் போரால் அமெரிக்க ராணுவ இழப்பும் சேதமும் எத்தகையது? - ஒரு விரைவுப் பார்வை

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த மார்ச் 28-ம் தேதி தாக்​குதலை தொடங்கின. இந்த போர் 38 நாட்​கள் நடைபெற்​றது. அதன்பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் அறி​வித்​தார். இந்நிலையில், அமெரிக்க ராணுவம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. ‘ஈரானில் மொத்​தம் 13,000-க்​கும் மேற்பட்ட இலக்​கு​களைத் தாக்​கினோம். ஈரான் போரில் 1,000-க்​கும் மேற்​பட்ட டொமஹாக் ஏவுகணை​கள் பயன்படுத்​தப்​பட்​டன. இது அமெரிக்க ராணுவம் ஒவ்வொரு ஆண்​டும் வாங்​கும் எண்ணிக்​கையை விட 10 மடங்​கும் அதிகம். ஒரு டொமஹாக் ஏவு​கணையின் விலை 3.6 மில்​லியன் டாலர்.

இவை தொலை​தூர இலக்​கு​களைத் தாக்​கும் திறன் படைத்தவை. ஈரான் போரில் 1,000-க்​கும் மேற்​பட்ட டொமஹாக் ஏவுகணை பயன்படுத்​தப்​பட்​ட​தால், அமெரிக்கா​வின் டொமஹாக் ஏவு​கணை​யின் கையிருப்பு 3,000-​மாக குறைந்​துள்​ளது. இதே​போல், எதிரி விமானங்​கள் மற்​றும் ஏவு​கணை​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க 1,200 பேட்​ரி​யாட் ஏவு​கணை​களை ஈரான் போரில் அமெரிக்கா பயன்​படுத்​தி​யது. இதன் விலை 4 மில்​லியன் டாலருக்கு மேலாகும்.

கடந்தாண்​டில் 600 பேட்​ரி​யாட் ஏவு​கணை​களை மட்​டுமே அமெரிக்கா உற்​பத்தி செய்​தது. மேலும், வானில் இருந்து தரை இலக்​கு​களை தாக்​கும் 1,100 ஜாஸ்​மர் ஏவுகணைகளை​யும் அமெரிக்க ராணுவம் ஈரான் போரில் பயன்​படுத்தி​யது. இதன் காரண​மாக இந்த வகை ஏவுகணை​கள் அமெரிக்க ராணுவத்​தில் தற்​போது 1,500 மட்டுமே இருப்​பில் உள்​ளது. இது 600 மைல் தூர​முள்ள இலக்​கு​களைத் தாக்கும். இதன் விலை 1.1 மில்​லியன் டாலர்.

1,000-க்​கும் மேற்​பட்ட ஏடிஏசிஎம்​எஸ் என்ற தரை இலக்குகளைத் தாக்​கும் ஏவுகணை​களை​யும் ஈரான் போரில் அமெரிக்கா பயன்படுத்தி​யது என்று அமெரிக்க ராணுவம் கூறி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஆசி​யா, மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களிலும் ஆயுத கையிருப்பு குறைந்​துள்​ளது.

ஈரானின் விலை குறைந்த ட்ரோன் தாக்​குதலை சமாளிக்க, அமெரிக்கா அதிக விலை​யுள்ள பேட்​ரி​யாட் ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி​யது. காலி​யான ஆயுதங்களை மீண்​டும் வாங்க கூடு​தல் நிதி ஒதுக்க வேண்​டும் என அமெரிக்க நா​டாளு​மன்​றத்​தில் பென்டகன்​ கோரிக்​கை விடுத்​துள்​ளது. இதற்​கு வெகு நாட்​களாகும்​ எனத்​ தெரிகிறது.

இதனிடையே, ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரிசெய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்க - இஸ்​ரேலிய படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதல் நடத்​தின. ஈரானும் பதிலடி​யாக 7 வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களைக் குறி வைத்து ஏவு​கணை, மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் அமெரிக்க வீரர்​கள் சிலர் இறந்​தனர். அமெரிக்க ராணுவ முகாம்​களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்​கள், போர் விமானங்​கள், ஓடு தளங்​கள் ஆகியவை பலத்த சேதமடைந்​தன.

அமெரிக்​கா​வின் வான் பாதுகாப்​பை​யும் மீறி ஈரானின் பழமை​யான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க ராணுவ முகா​முக்​குள் தாக்​குதல் நடத்​தி​யது. ஈரான் தாக்​குதலில் அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்​டகன் முழு​மையாக பகிர​வில்​லை. இந்த விஷ​யத்​தில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தால், அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசுக் கட்சி எம்​.பி.க்​களே கோபம் அடைந்​துள்​ளனர்.

சேத விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டும் என அமெரிக்க எம்​.பி.க்​கள் கோரிக்கை விடுத்து பல வாரங்​கள் ஆகி​யும், அது பற்றி எதை​யும் கூறாமல் கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்​டும் என பென்​டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது. இந்​தாண்டு ராணுவ பட்​ஜெட்​டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளு​மன்​றம் 838.5 பில்​லியன் டாலர் அனு​மதி அளித்​திருந்​தது.

ஈரான் போர் தொடங்​கிய ஒரு வாரத்​துக்​குள் 11 பில்​லியன் டாலர் செல​வான​தாக அமெரிக்கா தெரி​வித்​திருந்​தது. இந்நிலை​யில், அமெரிக்க அதி​காரி​கள் சிலர் கூறுகை​யில், “ஈ​ரான் தாக்​குதலால் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்​பட்ட சேதம் ஏற்கெனவே தெரிவிக்​கப்​பட்​டதை​விட மிக அதி​க​மாக உள்ளது. இவற்றை சரிசெய்​ய பல ஆயிரம் கோடி​ செலவாகும்” என்​றனர்​.

ஈரான் போரால் அமெரிக்க ராணுவ இழப்பும் சேதமும் எத்தகையது? - ஒரு விரைவுப் பார்வை
செல்வப்பெருந்தகை ‘மாற்றம்’... தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in