பி.எஃப். திட்டத்தில் கட்டாய பங்களிப்பு ரூ.1,800 - ஊழியர்கள் விருப்பம் போல் கூடுதலாக செலுத்தலாம்!

பி.எஃப். திட்டத்தில் கட்டாய பங்களிப்பு ரூ.1,800 - ஊழியர்கள் விருப்பம் போல் கூடுதலாக செலுத்தலாம்!
Updated on
1 min read

மத்​திய அரசு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்​டம் 2026-ஐ புதி​தாக அறி​வித்​துள்​ளது.

தற்​போது இபிஎஃப் விதி​களின்​படி, ஊழியர்​களுக்​கான மாதச் சம்பள வரம்பு ரூ.15,000 -ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் பிடிக்​கப்​படும் 12 சதவீதத் தொகை​யான ரூ.1,800 மட்​டுமே இனி கட்​டாயப் பங்​களிப்​பாக இருக்​கும்.

ஒரு ஊழியரின் சம்​பளம் ரூ.1 லட்​ச​மாக இருந்​தா​லும், அவரின் கட்​டாய இபிஎஃப் பிடித்​தம் ரூ.1,800 மட்​டுமே. எஞ்​சிய தொகையை ஓய்​வூ​தி​யச் சேமிப்​பிற்​காகச் செலுத்த விரும்​புபவர்​கள், தங்​களின் சொந்த விருப்​பத்​தின் அடிப்​படை​யில் செலுத்​தலாம்.

கூடு​தல் தொகை​யைச் செலுத்​தி​னால், அதற்கு இணை​யாக நிறு​வனங்​களும் கூடு​தல் தொகை​யைச் செலுத்த வேண்​டும் என்​கிற கட்​டா​யம் புதிய விதி​யில் இல்​லை. நிறு​வனங்​கள் விரும்​பி​னால் மட்​டுமே கூடு​தல் தொகை​யைச் செலுத்​தலாம். மேலும், இந்த கூடு​தல் பங்​களிப்பை ஊழியர்​களும் நிறு​வனங்​களும் தங்​களுக்​குத் தேவைப்​படும்​போது எப்​போது வேண்​டு​மா​னாலும் குறைத்​துக் கொள்​ளவோ அல்​லது நிறுத்​திக் கொள்​ளவோ முழு சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

முன்பு இபிஎஃப் கணக்​கில் இருந்து முன்​தொகை எடுப்​ப​தற்கு 13 பிரிவு​கள் இருந்​தன. தற்​போது அவை எளிமை​யாக்​கப்​பட்டு 3 முக்​கிய பிரிவு​களாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி: அத்​தி​யா​வசி​யத் தேவை​கள் (மருத்​து​வம், கல்​வி, திரு​மணம்), வீட்​டுத் தேவை​கள் (வீடு கட்​டு​தல் அல்​லது வாங்​குதல்), சிறப்​புச் சூழ்​நிலைகள் ஆகிய பிரிவு​களின் கீழ் மிக எளி​தாகப் பணம் பெற்​றுக் கொள்​ளலாம்.

ஊழியர்​கள் தங்​களின் பிஎஃப் கணக்​கில் இருந்து தகு​தி​யான தொகை​யில் 100 சதவீதம் வரை முன்​தொகை​யாக எடுக்க அனு​ம​திக்​கப்​படு​வர். இருப்​பினும், அவசரக் காலத் தேவைக்​காகக் கணக்​கில் எப்​போதும் குறைந்​த​பட்​சம் 25 சதவீதத் தொகையை இருப்​பாக வைத்​திருக்க வேண்​டும் என்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

புதிய திட்​டத்​தில் ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​களின் பிஎஃப் பங்​களிப்பை உறுதி செய்​யும் முழுப் பொறுப்​பும் முதன்மை நிறு​வனங்​களிடமே ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. ஒப்​பந்​த​தா​ரர் தனிப் பதிவு செய்​யாத பட்​சத்​தில், தொழிலா​ளர்​களுக்​கான பிஎஃப் தொகை​யைச் செலுத்​து​வதை முதன்மை நிறு​வனமே கண்​காணிக்க வேண்​டும் என்று இபிஎஃப்ஓ விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஃப். திட்டத்தில் கட்டாய பங்களிப்பு ரூ.1,800 - ஊழியர்கள் விருப்பம் போல் கூடுதலாக செலுத்தலாம்!
இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in