இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ரூ.35,000 கோடியில் கார் தொழிற்சாலை

இரு நாடுகளின் பிரதமர்கள் ஹரியானாவில் தொடங்கி வைத்தனர்
இந்தியா -  ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி. படம்: பிடிஐ

இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி. படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: ஹரி​யானா மாநிலம் கார்​கோ​டா​வில் ரூ.35,000 கோடி முதலீட்​டில் புதிய கார் தொழிற்​சாலையை பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் நேற்று தொடங்கி வைத்​தனர். பாது​காப்பு, வர்த்​தகம் தொடர்​பாக இரு நாடுகள் இடையே பல்​வேறு முக்​கிய ஒப்​பந்​தங்​களும் கையெழுத்​தாகின.

இந்​தியா - ஜப்​பான் வரு​டாந்​திர மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இதில் பங்​கேற்க ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி 3 நாள் அரசு​முறைப் பயண​மாக நேற்று டெல்​லிக்கு வந்​தார். குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் அவருக்கு சிவப்​புக் கம்பள வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர் டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் மோடி​யும், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யும் அதி​காரப்​பூர்​வ​மாக சந்​தித்​துப் பேசினர். பின்​னர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர். அவர்​கள் கூறிய​தாவது:

பிரதமர் மோடி: இந்​தி​யா​வின் ஆட்டோ மொபைல், மின்​னணு துறை வளர்ச்​சிக்கு ஜப்​பான் முக்​கிய பங்​களிப்​பு​களை வழங்கி உள்​ளது. தற்​போது ஏஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்​நுட்​பத்​தில் இரு நாடு​களும் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றன. பாது​காப்பு தொடர்​பாக முக்​கிய ஒப்​பந்தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதுதவிர, மருந்து உற்​பத்​தி, மருத்​துவ உபகரணங்​கள், உயிரி தொழில்​நுட்​பம், நிதிச் சேவை தொடர்​பாக​வும் முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன.

இந்​தி​யா- ஜப்​பான் பயோ காஸ் திட்​டத்​தின்​கீழ் நாடு முழு​வதும் புதி​தாக 1,000 பயோ காஸ், இயற்கை உரத் தொழிற்​சாலைகள் கட்​டப்​படும். இதன்​மூலம் இந்​திய கிராமங்​கள் வளர்ச்சி அடை​யும். இந்தி​யா​வில் கச்சா எண்​ணெய் கையிருப்பை அதி​கரிக்​கத் தேவையான தொழில்​நுட்ப உதவி​களை வழங்க ஜப்​பான் முன்​வந்​துள்​ளது. பேட்​டரி, பசுமை ஹைட்​ரஜன், அணுசக்தி, கப்​பல் கட்​டு​மானம், விமான போக்​கு​வரத்​து, சரக்கு போக்​கு​வரத்து உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​கள் இணைந்து பணி​யாற்​றும்.

ஜப்​பான் பிரதமர் டகாய்ச்சி: இந்​தி​யா​வின் பெட்​ரோலிய கையிருப்பை அதி​கரிக்க தேவை​யான தொழில்​நுட்ப உதவி​களை ஜப்​பான் வழங்​கும். எரிசக்​தி, அரிய​வகை கனிமங்​கள் தேவையைப் பூர்த்தி செய்ய இரு நாடு​களும் ஒன்​றிணைந்து செயல்​படும். ஜப்​பான் - இந்​திய கடற்​படைகள் இணைந்து விரை​வில் போர்ப் பயிற்​சிகளில் ஈடு​படும். இரு நாடு​களும் இணைந்து ஆயுதங்​களை உற்​பத்தி செய்​யும். இவ்​வாறு அவர்​கள் பேசினர்.

இரு நாடு​கள் இடையே கையெழுத்தான பாது​காப்பு ஒப்​பந்தத்தின்​படி, ‘இந்​தி​யா​வில் தயாரிப்​போம்’ திட்​டத்​தின்​கீழ் போர்க் ​கப்​பல்​களுக்கு தேவை​யான சிறப்பு ஆன்டெ​னாக்​கள் தயாரிக்​கப்பட உள்​ளன. இதன்​மூலம் எதிரி​களின் ரேடார்​களால் இந்​திய, ஜப்​பானிய போர்க் கப்​பல்​களை கண்​டுபிடிக்க முடி​யாது. வரும் காலத்தில் இணைந்து போர்க்கப்​பல்​கள் தயாரிக்​க​வும் கொள்​கைரீ​தி​யில் உடன்​பாடு எட்​டப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

ஹரி​யா​னா​வின்​ கார்​கோ​டா​வில்​ ரூ.35,000 கோடி முதலீட்​டில்​ மாருதி சுசூகி நிறு​வனத்​தின்​ கார்​ உற்​பத்​தி தொழிற்​சாலை கட்​டப்​பட்​டுள்​ளது. டெல்லியில் நேற்று மாலை நடை​பெற்​ற இந்​தி​ய - ஜப்​பான்​ கூட்​டு பொருளா​தார மன்​றக்கூட்​டத்தின்​போது பிரதமர்​ மோடி​யும்​, ஜப்​பான்​ பிரதமர்​ சனே டகாய்ச்​சி​யும்​ இணைந்து காணொலி வாயி​லாக இந்த புதி​யகார்​ தொழிற்​சாலையை தொடங்கி வைத்​தனர்​. சுமார்​ 800 ஏக்​கரில் அமைந்​துள்​ள இந்​த ஆலை உலகின்​ மிகப்​பெரிய கார்​ தொழிற்​சாலைகளில்​ ஒன்​றாகும்​. முதல்​கட்​ட​மாக, இங்கு ஆண்​டுக்​கு 5 லட்​சம்​ கார்​கள்​ உற்​பத்​தி செய்​யப்​படும்.

பின்​னர்​ படிப்​படி​யாக இது 10 லட்சம்​ வரை அதி​கரிக்​கப்​பட உள்ளது. பொருளாதார மன்றக் கூட்டத்தில் சனே டகாய்ச்சி பேசியபோது, ‘‘மும்பை - அகமதாபாத் இடையே2027-ல் புல்லட் ரயில் சேவையைதொடங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை ஜப்பான் வழங்கும். இந்த வழித்தடத்தில் ஜப்பானின் அடுத்த தலைமுறை புல்லட் ரயிலான இ-10 ஷிங்கன்சென் அறிமுகம் செய்யப்படும்’’ என்றார். இந்தபுல்லட் ரயில்கள் மணிக்கு 320 முதல் 400 கி.மீ. வேகத்தில் செல்லும். இதன்மூலம் மும்பையில் இருந்து 2 மணி நேரத்தில் அகமதாபாத் செல்ல முடியும்.

என் தங்கை டகாய்ச்சி: மோடி நெகிழ்ச்சி

டெல்லியில் இந்தியா - ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெற்றுள்ளார். அவர் எனது அழகிய இளம் தங்கை. அவர் ஜப்பானின் நாரா பகுதியை சேர்ந்தவர். இந்த பகுதி இந்தியா - ஜப்பான் இடையிலான புத்தமதப் பாரம்பரியத்தின் மையமாக விளங்குகிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய சனே டகாய்ச்சி, ‘‘பிரதமர் மோடி, என்னை தங்கை என்று அழைத்து உறவு பாராட்டினார். அவர் எனது அண்ணன். நாங்கள் இருவரும் அண்ணன், தங்கையாக செயல்படுவோம்’’ என்று தெரிவித்தார்.

உள்ளூர் கரன்சியில் வணிகம்: இந்தியாவும், ஜப்பானும் தற்போது டாலரில் வணிகம் மேற்கொள்கின்றன. இதற்கு மாற்றாக, இந்திய ரூபாய் மற்றும் ஜப்பானின் யென் கரன்சியில் வணிகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் நேரம், பணம் மிச்சமாகும். இதுதொடர்பாக கடந்த ஆண்டிலேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை முழுமையாக அமல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது.

<div class="paragraphs"><p>இந்தியா -  ஜப்பான் கூட்டு பொருளாதார மன்றத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி. படம்: பிடிஐ</p></div>
ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் ஏன்? - காங்கிரஸ் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in