Short news

மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை

இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் சில மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் உள்பட மதுரை மாநகர் முழுவதுமே ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. கோரிப்பாளையம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரையில் பெய்த கனமழை கோடை வெயிலுக்கு ஆறுதல் அளித்தாலும், சாலையில் தேங்கிய வெள்ளம் வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

x