ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்?

ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்?
Updated on
1 min read

டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்க அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: ஈரான் உச்ச தலை​வர் அயத்துல்லா அலி காமேனி மீது தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டோம். முதல் கட்​டத்​திலேயே அதிர்ச்சி அளிக்​கும் வகை​யில் தாக்​குதல் இருக்க வேண்​டும் என்று நினைத்​தோம்.

மேலும், சனிக்​கிழமை மாலை காமேனி முக்​கிய ஆலோ​சனை நடத்த இருப்​ப​தாக எங்​களுக்​குத் தகவல் கிடைத்​தது. அதனால், நாங்​கள் தாக்​குதல் நடத்த போவது குறித்து தகவல் கசிந்து அவர் தப்​பி​விட்​டால் நிலைமை மோச​மாகி விடும்.

இதற்​கிடை​யில், சனிக்​கிழமை மாலை​ நடக்க இருந்த ஆலோ​சனை கூட்​டம் காலை​யிலேயே நடை​பெற உள்​ள​தாக இஸ்​ரேல் உளவுப் பிரி​வினர் கண்​டு​பிடித்து தகவல் தெரி​வித்​தனர். அதனால் வேறு வழி​யின்றி உடனடி​யாகத் தாக்​குதலை தொடங்கி விட்​டோம்.

இவ்​வாறு அமெரிக்க அதி​காரி​கள் தெரி​வித்​தனர். அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலில் காமேனி கொல்​லப்​பட்டதை ஈரான் உறுதி செய்​துள்​ளது. மேலும் காமேனி​யின் மகள், மரு​மகள், பேத்​தி​யும் உயி​ரிழந்​துள்​ள​தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஏன்?
கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in