கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி

கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி
Updated on
1 min read

ஹோபர்ட்: இந்​தியா - ஆஸ்​திரேலியா மகளிர் அணி​கள் இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு​நாள் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த ஆஸ்​திரேலிய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 409 ரன்​கள் குவித்​தது. தனது 8-வது சதத்தை விளாசிய கேப்​டன் அலிசா ஹீலி 98 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 27 பவுண்​டரி​களு​டன் 158 ரன்​கள் குவித்தார்.

பெத் மூனி 84 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 10 பவுண்​டரி​களு​டன் 106 ரன்​கள் விளாசி​னார். 410 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய மகளிர் அணி 45.1 ஓவர்​களில் 224 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக ஸ்னே ராணா 44, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 42, தீப்தி சர்மா 29, பிர​திகா ராவல் 27, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 25, ரிச்சா கோஷ் 18 ரன்​கள் சேர்த்​தனர். ஸ்மிருதி மந்​தனா ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்​தார்.

ஆஸ்​திரேலிய அணி சார்​பில் அலனா கிங் 4, ஜார்​ஜியா வார்​ஹாம் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 185 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய மகளிர் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 3-0 என முழு​மை​யாக கைப்​பற்​றியது. ஆட்ட நாயகி​யாக அலிசா ஹீலி தேர்​வா​னார்​.

கடைசி போட்டியிலும் ஆஸி. மகளிர் அணி வெற்றி
வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in