ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா

ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரான் போரை வேக​மாக முடிவுக்கு கொண்டு வரவேண்​டும் என்​ப​தில் அமெரிக்கா தீவிர​மாக உள்​ளது. இதற்​காக, தற்​போது அதிக சக்​தி​வாய்ந்த ஜேஏஎஸ்​எஸ்​எம்​-இஆர் ஏவு​கணை​களை நிலைநிறுத்​தும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளது.

மற்ற நாடு​களின் பாது​காப்​புக்​காக வைக்​கப்​பட்​டிருந்த கையிருப்​பு​களைக் குறைத்​து, தனது முழு ஏவு​கணை பலத்தை​யும் ஈரான் போருக்​காக அமெரிக்கா திசை திருப்பி​விட்​டுள்​ள​தாகவே தெரி​கிறது. அமெரிக்​கா​வின் பசிபிக் பிராந்​தி​யக் கிடங்​கு​களில் இருந்த சுமார் ரூ.13.91 கோடி (1.5 மில்​லியன் டாலர்) மதிப்​புள்ள இந்த ஏவுகணைகளை இடமாற்​றம் செய்ய மார்ச் மாத இறுதியில் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, அமெரிக்​கா​வின் மையப்​பகுதி மற்​றும் பிரிட்டனின் ஃபேர்ஃ​போர்டு தளங்​களில் இருந்த ஏவுகணைகள் தற்​போது மத்​திய கட்​டளைப் பிரி​வின் (சென்ட்​காம்) தளங்​களுக்​குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த நடவடிக்​கைக்​குப் பிறகு, அமெரிக்​கா​விடம் இருந்த 2,300 ஏவு​கணை​களில் வெறும் 425 மட்​டுமே மற்ற உலக நாடு​களின் பயன்​பாட்​டிற்​காக எஞ்​சி​யிருக்​கும். இது 17 பி-1பி போர் விமானங்​கள் ஒரே ஒரு​முறை தாக்​குதல் நடத்​து​வதற்கு மட்​டுமே போது​மான​தாக இருக்​கும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிநவீன ஏவுகணைகளை குவிக்கும் அமெரிக்கா
“கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக” - பழனிசாமி கடும் தாக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in