“கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக” - பழனிசாமி கடும் தாக்கு

“கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக” - பழனிசாமி கடும் தாக்கு
Updated on
1 min read

கண்​ணுக்​குத் தெரி​யாத காற்​றி​லும் ஊழல் செய்த கட்சி திமுக என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனிசாமி பேசி​னார்.

புதுச்சேரி சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக சார்​பில் உப்​பளம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் மாநில செய​லா​ளர் அன்​பழகன், உருளை​யன்​பேட்டை தொகு​தி​யில் போட்​டி​யிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் எடப்​பாடி பழனி​சாமி நேற்று மாலை பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

அவர் பேசி​ய​தாவது: மாநிலத்​தில் ஒரு கட்​சி​யும், மத்​தி​யில் ஒரு கட்​சி​யும் ஆட்சி செய்​தால், மாநிலத்​துக்கு தேவை​யான திட்​டங்​களும் கிடைக்​காது. நிதி​யும் கிடைக்​காது. ஒரு வண்​டிக்கு இரண்டு சக்​கரம் இருந்​தால் தான் இலக்கை அடைய முடி​யும். அந்த அடிப்​படை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி அமைந்​திருக்​கிறது.

திமுக தலை​வர் ஸ்டா​லின் இங்கு தேர்​தல் பிரச்​சா​ரத்துக்கு வரு​வார். தமிழகத்​தில் கொள்​ளை​யடித்​தது போதாது என்று இங்​கும் கொள்​ளை​யடிக்​கப் பார்க்​கிறார். தமிழகத்​தில்கலெக் ஷன், கமிஷன், கரப்​ஷன் நடக்​கிறது. டாஸ்​மாக்​கில் மட்​டும் பல்​லா​யிரக்​கணக்​கான கோடிக்கு ஊழல் செய்​துள்​ளனர். புதுச்​சேரி​யில் மது​பான விற்​பனை அதி​க​மாக இருக்​கிறது. அது ஸ்டா​லினுக்கு கண்ணை உறுத்​திக்​கொண்டு இருக்​கிறது.

கண்​ணுக்கு தெரி​யாத காற்​றி​லும் ஊழல் செய்​கின்ற ஒரே கட்சி திமுக. மத்​தி​யில் ரூ.1 லட்​சத்து 74 ஆயிரம் கோடி கொள்​ளை​யடித்த 2 ஜி ஸ்பெக்ட்​ரம் ஊழல் நாட்​டையே உலுக்கி விட்​டது. உலகள​வில் கூட இந்த அளவுக்கு ஊழல் நடக்​க​வில்​லை. நாடு முழு​வதும் நம்மை தலைகுனிய வைத்த கட்சி திமுக. இவ்வாறு அவர் பேசினார்.

பிரேமல​தாவுக்கு பதில்: மாநிலங்​களவை எம்​.பி. பதவியை தேமு​தி​க​வுக்கு ஒப்​பந்​தப்​படி அதி​முக கொடுக்​க​வில்லை என்று பிரேமலதா கூறியதற்கு பழனி​சாமி பதிலளித்​துள்​ளார். நெய்​வேலி பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பேசிய பழனி​சாமி, “திமுகவை விஜய்​காந்த் கடுமை​யாக எதிர்த்​தார். திமுகவை கடுமை​யாக எதிர்த்த கட்சி தேமு​திக. ஆனால், இன்று நம்​மைப் பார்த்து மாநிலங்​களவை பதவியை தேமு​தி​க​வுக்கு கொடுக்​க​வில்லை என்று சொல்​கிறார்​கள்.

2026-ல் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து தேமு​திக போட்​டி​யிட்​டால் மாநிலங்​களவை எம்​.பி. பதவி வழங்​கப்​படும் என்று நான் தெளி​வாகச் சொன்​னேன். கருணாநி​தியை மேடை​யில் வைத்​துக் கொண்டே அவர் முன்​னிலை​யில் விஜய்​காந்த்தை நடிகர் வடிவேலு கடுமை​யாக விமர்​சித்​தார். அப்​படிப்​பட்ட தி​முக​வுடன் ஏதோ காரணங்​களுக்​காக இன்று தேமு​திக கூட்​டணி அமைத்​திருக்​கிறீர்​கள்​. அது உங்​கள்​ சொந்​த விஷ​யம்​. அதற்​குள்​ நான்​ செல்​லவில்​லை’’ என்றார்.

“கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக” - பழனிசாமி கடும் தாக்கு
விஜய் வேட்புமனுவில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in