மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு

மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசி​யப் போருக்கு மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்​தி​யா​வில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்​ஸ்' தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளது. அந்​தப் பதி​வில், “இந்​தி​யா​வுட​னான எங்​களின் அற்​புத​மான உறவு தொடர்ந்து வலுப்​பெறும். பிரதமர் மோடி​யும் நானும் (ட்ரம்ப்) காரி​யங்​களை சிறப்​பாக முடிக்​கும் இரு தலை​வர்​கள். இத்​தகைய செயல்​திறன் பலருக்கு இருப்​ப​தில்​லை’’ என்று ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.

மேற்கு ஆசி​யா​வில் நடை​பெறும் போக்கு மத்​தி​யில் அதிபர் ட்ரம்​பின் இந்​தக் கருத்து வெளி​யாகி​யுள்​ளது.கடந்த செவ்​வாய்க்​கிழமை பிரதமர் மோடி​யும் அதிபர் ட்ரம்​பும் நடத்​திய தொலைபேசி உரை​யாடலுக்கு பிறகு இக்​கருத்து வெளிவந்​துள்​ளது.

மேற்கு ஆசி​யப் போர் குறித்து அப்​போது இரு தலை​வர்​களும் முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். உலகளா​விய எரிசக்தி விநி​யோகத்​திற்கு உயிர்​நாடி​யாகத் திகழும், உலகின் எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​தில் ஏறத்​தாழ ஐந்​தில் ஒரு பங்கை கையாளும் ஹார்​முஸ் ஜலசந்​தியை திறந்த நிலை​யிலும் பாது​காப்​பாக​வும் வைத்​திருப்​பதே விவாதத்​தின் முக்​கிய அம்​ச​மாக அமைந்​தது.

மேற்கு ஆசிய விவ​காரத்​தில் இந்​தியா எச்​சரிக்​கை​யான அதேவேளை​யில் தெளி​வான நிலைப்​பாட்டை கடைப்​பிடித்து வரு​கிறது. இந்​தியா தனது பொருளா​தார நலன்​களை பாது​காக்​கும் அதேவேளை​யில் பேச்​சு​வார்த்தை மற்​றும் நிதானத்தை கடைப்​பிடிக்​கு​மாறு இரு தரப்​புக்​கும் வலி​யுறுத்தி வரு​கிறது.

வேக​மாக மாறிவரும் புவி​சார் அரசி​யல் சூழலுக்கு மத்​தி​யில், அமெரிக்கா - இந்​தியா இடையி​லான ஒருங்​கிணைந்த செயல்​பாட்டை இவ்​விரு தலை​வர்​களுக்கு இடையி​லான உரை​யாடல் பிர​திபலித்​தது.

இதற்​கிடை​யில் வளை​குடா முழு​வதும் ஈரான் தனது பதிலடி நடவடிக்​கைகளை தொடர்ந்​தா​லும், இந்​தியா உள்​ளிட்ட நட்பு நாடு​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி​யை திறந்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் பாராட்டு
“கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கை இழந்ததால் ‘சீட்’ குறைத்தது திமுக!” - பழனிசாமி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in