பிரான்ஸில் தீவிரம் அடையும் பள்ளி மாணவர்கள் போராட்டம் - நிலவரம் என்ன?

பிரான்ஸில் தீவிரம் அடையும் பள்ளி மாணவர்கள் போராட்டம் - நிலவரம் என்ன?
Updated on: 
1 min read

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களின் போராட்டம் தொடர்வது அந்நாட்டு அரசுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் குண்டு வெடித்ததில் 15 வயது சிறுவனின் கை சேதமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்ஸ் கல்வித் துறை அமைச்சர் எடுவார்ட் ஜெஃப்ரே, சுமார் 500 பள்ளிகளை பகுதி அளவில் அல்லது முழுவதுமாக மூடப்படுவதாக இன்று அறிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் தேசியளவில் போராடி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதோடு மாணவர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே மோதலும் ஏற்பட்டுள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி உள்ளதாக களத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

இந்த மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து சுமார் 24 பள்ளிகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாக தகவல். சுமார் 78 ஆசிரியர்கள் தாக்குதலுக்கு ஆளானதாக அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து இந்த போராட்டம் தொடங்கியது. பள்ளி மாணவர்களுடன் கல்லூரி மாணவர்களும் போராடி வருகின்றனர்.

15 வயது சிறுவனின் கை சேதம்

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள லென்ஸ் நகரில், போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கண்ணீர்ப்புகைக் குண்டை வீசியுள்ளது. அது வெடிக்காத சூழலில் அதை மீண்டும் போலீஸார் மீது எறியும் நோக்கில் செயல்பட்ட 15 சிறுவன் அந்த குண்டை எடுத்துள்ளார். அப்போது அது அவரது கையில் வெடித்துள்ளது. இதில் அந்த சிறுவனின் கை சேதமடைந்ததாக தகவல். மேலும், போலீஸாரை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கற்களை வீசுவதாக தகவல்.

மாணவர்களின் பிரச்சினை என்ன?

பிரான்ஸ் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு படுமோசமடைந்துள்ளது. பள்ளிகளுக்குப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், காலை 8 மணிக்குச் செல்லும் மாணவர்கள் மாலை 6 மணி வரை பள்ளியிலேயே இருக்க வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நேரத்தில் பெரும் பகுதி நேரத்தைச் சும்மா கழிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாரீஸின் புறநகரில் உள்ள பள்ளிகளில் தொடங்கிய போராட்டம், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் படிப்படியாக அதிகரித்து நாடு முழுவதும் பரவிவிட்டது. இன்று பள்ளி மாணவர்களோடு சேர்ந்து கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்.

இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாட்டில் உள்ள 3,700-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

பிரான்ஸில் தீவிரம் அடையும் பள்ளி மாணவர்கள் போராட்டம் - நிலவரம் என்ன?
2027 உலகக் கோப்பைக்கு ஷமி தேவையா? - தினேஷ் கார்த்திக் மாறுபட்ட கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in