

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக ரஷ்யாவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. எனவே, உக்ரைனுக்கு மிகப் பெரியளவில் பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு செய்தது.
உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 74 ஏவுகணைகள் மற்றும் 496 ட்ரோன்களை ரஷ்யா ஏவியது. இவை உக்ரைனில் 30 இடங்களைத் தாக்கின. இதில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பற்றின. 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர், 90-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்க பேட்ரியாட் போன்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளைத் தரும்படி நட்பு நாடுகளிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.