உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு

உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு
Updated on
1 min read

மாஸ்கோ: உக்ரைன் ட்ரோன்​கள் மூலம் நடத்​தும் தாக்குதலால் ரஷ்​யா​வுக்கு தின​மும் ரூ.926 கோடி இழப்பு ஏற்படுகிறது.

ரஷ்​யா​வுக்கு அதிக வரு​வாய் ஈட்​டித் தரும் தொழில் கச்சா எண்​ணெய் விற்​பனை​யும் முக்​கிய​மானது. அதனால், ரஷ்யா​வின் கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு மையங்​கள், சேமிப்பு கிடங்​கு​கள், துறை​முகங்​கள் மீது உக்​ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

ரஷ்​யா​வில் உள்ள 10 பெரிய கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் டுவாப்சி சுத்​தி​கரிப்பு நிலை​யம், ரோஸ்​நெஃப்ட் சுத்​தி​கரிப்பு மையம் ஆகிய​வை​யும் அடங்​கும். இங்கு உக்​ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்​து​வ​தால் தீ விபத்துகள் ஏற்​பட்டு அரு​கில் உள்ள சேமிப்பு கிடங்குகளுக்கு பரவும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி நடைபெறும் ரஷ்​யா​வின் பிரிம்​மோர்​ஸ்க், உஸ்ட்​-லு​கா, ஷேஸ்க்​ஹரிஸ் மற்​றும் டுவாப்சி ஆகிய பகு​தி​கள் மீது உக்​ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்​துகிறது. இதன் காரண​மாக ரஷ்​யா​வின் கச்சா எண்​ணெய் ஏற்​றுமதி 8,80,000 பேரல்​கள் குறைந்​து, நாள் ஒன்​றுக்கு 100 மில்​லியன் டாலர் (ரூ.926 கோடி) இழப்​பு ஏற்​படு​வ​தாக ரஷ்​யா தெரி​வித்​துள்​ளது.

உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு தினமும் ரூ.926 கோடி இழப்பு
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in