உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்

உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி​யின் ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) என்ற நிதி மேலாண்மை புத்​தகம் 1997-ல் வெளி​யானது. இது​வரை 4.4 கோடிக்​கும் அதி​க​மான பிரதிகள் விற்​பனை​யாகி உள்​ளன. இதன் மூலம் பெரும் புகழும் செல்​வ​மும் ஈட்​டிய 79 வயதான கியோ​சாகிக்கு சுமார் 1.2 பில்​லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 ஆயிரம் கோடி) கடன் இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

தனது ரியல் எஸ்​டேட் வர்த்​தகம் முழு​வதுமே சுமார் 1.2 பில்​லியன் டாலர் கடனின் மீது கட்​டப்​பட்​டது​தான் என்​பதை அவர் வெளிப்​படை​யாகவே ஒப்​புக்​கொண்​டுள்​ளார். பல்​வேறு நேர்​காணல்​கள், ‘பாட்​காஸ்ட்’ நிகழ்ச்​சிகளில் இந்​தக் கடன் தொகை​யைக் குறிப்​பிட்​டுப் பேசி​யுள்ள கியோ​சாகி, வரு​மானம் தரும் சொத்​துகளை வாங்​கு​வதற்​காக கடன் வாங்​கு​வதே பணக்​காரர்​களின் அணுகு​முறை என்​ப​தற்கு இதுவே சான்று என்று தனது வாதத்தை வைக்​கிறார்.

சொத்​துகளின் மதிப்பு உயரும்​போது அவற்​றின் மீது கடன் வாங்​கு​வது கியோ​சாகி​யின் முக்​கிய உத்​தி​யாகும். சொத்​துகளை விற்​பனை செய்​வதற்​குப் பதிலாக, அதிலிருந்து பெறப்​படும் கடன் தொகையை வரி​விலக்கு பெற்ற வரு​மான​மாக அவர் பயன்​படுத்​துகிறார். மேலும், ஒரு முதலீட்​டில் இழப்பு ஏற்​பட்​டால் அது மற்​றொன்​றைப் பாதிக்​காத வண்​ணம், ஒவ்​வொரு முதலீட்​டை​யும் தனித்​தனி ‘எல்​.எல்​.சி’ நிறு​வனங்​களின் கீழ் அவர் தனிமைப்​படுத்தி நிர்​வகிக்​கிறார்.

இருப்​பினும், இதன் அபா​யங்​களைப் புரிந்​து​கொள்​ளாமல் தனது உத்​தி​யைக் குருட்​டுத்​தன​மாகப் பின்​பற்ற வேண்​டாம் என்​றும் கியோ​சாகி எச்​சரிக்​கிறார். “கடனைப் பயன்​படுத்​தக் கற்​றுக்​கொள்​ளப் போகிறீர்​கள் என்​றால், அதற்​குரிய சரி​யான நிதி​யறிவைப் பெற வேண்​டும்” என்று அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

கியோ​சாகி​யின் முன்​னாள் மனை​வி​யும் தொழில் கூட்​டாளி​யு​மான கிம் கியோ​சாகி ‘வேனிட்டி ஃபேர்’ இதழுக்கு அளித்த பேட்​டி​யில், “இந்​தக் கடனானது பிற பங்​கு​தா​ரர்​களு​டன் இணைந்து வைத்​துள்ள சுமார் 1,500 குடி​யிருப்பு பிரிவு​களோடு மட்​டுமே தொடர்​புடையது. இது கியோ​சாகி​யின் தனிப்​பட்ட பொறுப்பை பாதிக்​காது” என்று தெளிவுபடுத்​தி​யுள்​ளார்.

‘வேனிட்டி ஃபேர்’ மதிப்​பீட்​டின்​படி, கியோ​சாகி தனக்கு ஆண்​டிற்கு 3 மில்​லியன் டாலர் வரு​மானம் வரு​வ​தாகக் கூறு​வது உண்​மையெனில், அவரது நேரடிப் பங்​கிற்​குரிய கடன் தொகை 30 மில்​லியன் முதல் 60 மில்​லியன் டாலர் வரை மட்​டுமே இருக்​கக்​கூடும்​ என்​று தகவல்​கள்​ தெரிவிக்​கின்​றன.

உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்
யுபிஐ: நம் பணம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை ஆவது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in