இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகள்!

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகள்!

மரி​யாதையை விலைக்கு வாங்க முடி​யாது என நெட்டிசன்கள் கருத்து
Published on

இஸ்லாமாபாத்: அமெரிக்கா​வுடன் இந்தியா அண்மையில் மேற்​கொண்ட வர்த்தக ஒப்​பந்​தம் பாகிஸ்தானில் கடும் அரசி​யல் அதிர்​வலைகளை ஏற்படுத்தி​யுள்​ளது. அமெரிக்கா​வுடன் பல மாதங்​களாக பாகிஸ்​தான் நெருக்கம் காட்​டி​யும், அதனால் எந்​தப் பயனும் இல்​லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்​றும் ராணுவ தலை​மைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் மேற்​கொண்ட தீவிர முயற்​சிகளுக்​குப் பலனாக, பாகிஸ்​தானுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா நிர்​ண​யித்​தது. ஆனால், பல மாதங்​களாக டிரம்​பின் அழுத்​தங்​களுக்​குப் பணி​யாமல் உறு​தி​யாக நின்ற இந்​தியா 18 சதவீத வரியுடன் பாகிஸ்​தானை விட சாதக​மான ஒப்​பந்​தத்​தைப் பெற்​றுள்​ளது.

பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் இருக்​கும் புகைப்படங்களை சமூக வலை​தளங்​களில் பகிர்ந்த அதிபர் டிரம்ப், இந்​தி​யப் பொருட்களுக்​கான வரி 18 சதவீதமாகக் குறைக்​கப்​படும் என்று அறி​வித்​தார். இது பாகிஸ்​தானுக்கு விதிக்​கப்​பட்ட வரியை விட ஒரு சதவீதம் குறைவு என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்​பிற்கு நோபல் பரிசுக்கு பரிந்​துரை, அமைதி வாரி​யத்​துக்கு ஆதரவு என பாகிஸ்​தான் பல்​வேறு முயற்​சிகளை மேற்​கொண்ட போதிலும், வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யாவை விட கூடுதல் வரிச்​சுமை​யையே அந்த நாடு பெற்​றுள்​ளது. இந்த விவ​காரத்தை தற்​போது கையில் எடுத்​துள்ள நெட்டிசன்கள் பாகிஸ்​தான் அரசை கடுமை​யாக விமர்சித்து வரு​கின்​றனர்.

அளவுக்கு அதி​க​மான பணிவைக் காட்​டா​மலேயே இந்தியா எப்​படி சிறந்த ஒப்​பந்​தத்​தைப் பெற்​றது எப்​படி என்​பது குறித்து அவர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இது தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் பகிரப்​படும் கருத்துக்​கள் அந்​நாட்டு அரசின் இயலாமையை சுட்​டிக்​காட்​டு​வ​தாக அமைந்​துள்​ளன.

வியூகம் தோற்றுவிட்டது

சமூக வலை​தள​வாசி ஒரு​வர் கூறுகை​யில், ``விற்பனையாளராக செயல்​பட்ட பாகிஸ்​தான் அரசின் வியூ​கம் தோற்​று​விட்​டது. பலுசிஸ்​தானின் கனிம வளங்களை அமெரிக்கா​வுக்கு நீங்​கள் பெட்டி பெட்டியாகக் கொடுக்​கலாம், ஆனால் மரி​யாதையை விலைக்கு வாங்​க முடியாது” என்​று தெரிவித்துள்ளார்.

இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகள்!
உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதலா? - மனம் திறக்கும் பாகிஸ்தான் கேப்டன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in