உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதலா? - மனம் திறக்கும் பாகிஸ்தான் கேப்டன்

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதலா? - மனம் திறக்கும் பாகிஸ்தான் கேப்டன்
Updated on
1 min read

கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்​ளும் பாகிஸ்தான் அணி, லீக் சுற்​றில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்தை புறக்​கணிக்க முடிவு செய்​துள்​ளது. அதேவேளை​யில் மற்ற 3 லீக் ஆட்​டங்​களி​லும் விளையாடுகிறது. இந்த ஆட்​டங்​கள் இலங்​கை​யில் நடைபெற உள்​ளன.

இந்​நிலை​யில் உலகக் கோப்பை தொடரில் பங்​கேற்​கும் அணி​களின் கேப்​டன்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற பாகிஸ்​தான் அணி​யின் கேப்டன் சல்​மான் அலி ஆகா கூறிய​தாவது: இந்தியாவுடனான போட்டி எங்​கள் கட்​டுப்​பாட்​டில் இல்லை. அது அரசாங்​கத்​தின் முடிவு, நாங்​கள் அதை மதிக்கிறோம்.

அவர்​கள் என்ன சொல்​கிறார்​களோ, அதையே நாங்​கள் செய்​வோம். நாக் அவுட் சுற்​றி​லும் அரசு எடுக்​கும் முடிவுக்கு நாங்​கள் கட்​டுப்​படு​வோம். எப்​படி​யிருந்​தா​லும், போட்டி நடக்​குமா இல்​லையா என்று எனக்​குத் தெரி​யாது, ஆனால் அரசாங்​கம் ஒரு விஷ​யத்​தைச் சொல்லியிருக்கிறது, நாங்​கள் அதையே செய்​யப் போகிறோம். போட்டி பற்றி எனக்​குத் தெரி​யாது.

அரை​யிறுதி அல்​லது இறு​திப் போட்​டி​யில் நாங்​கள் மீண்டும் இந்​திய அணி​யுடன் விளை​யாட நேர்ந்​தால், நாங்கள் மீண்​டும் அரசாங்​கத்​தின் ஆலோ​சனை​யின்​படி செயல்​படு​வோம். வங்​கதேச வீரர்​கள் எங்​களது சகோதரர்கள். அந்த அணி இல்​லாததை பார்க்க வருத்தமாக உள்​ளது. கடந்த உலகக் கோப்​பை​யில் நாங்கள் அமெரிக்​கா​விடம் தோல்வி கண்​டிருந்​தோம்.

அது கடந்த காலம். இது புதிய உலகக் கோப்​பை, புதிய அணி. நாங்​கள் மிக​வும் உற்​சாக​மாக இருக்​கிறோம். ஒரு கேப்​ட​னாக இது எனக்கு முதல் உலகக் கோப்பை தொடர். அதனால் உற்​சாக​மாக இருக்​கிறேன். ஒரு கேப்​ட​னாக, நான் முன்​னின்று அணியை வழிநடத்​த​வும், அணிக்​காக என்​னால் முடிந்த அனைத்​தை​யும் செய்​ய​வும், அணி​யின் சிறந்த திறனை வெளிக்​கொண்டு வரவும், வீரர்​கள் தங்களின் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​தக்​கூடிய ஒரு சூழலை உரு​வாக்​க​வும் விரும்​பு​கிறேன்.

ஆசிய கோப்​பைக்கு பின்​னர் நாங்​கள் சிறப்​பாக விளையாடி வரு​கிறோம். எல்​லாம் நன்​றாக சென்று கொண்​டிருக்​கிறது. மிகுந்த நம்​பிக்​கை​யுட​னும் உற்சாகத்துட​னும் இருக்​கிறோம். சிறப்​பாகச் செயல்படுவோம் என்று உறு​தி​யாக நம்​பு​கிறோம்.

கடந்த 3 உலகக் கோப்பை தொடர்​களி​லும் நாங்​கள் முதல் சுற்​றுடன் வெளி​யேறினோம். இந்​தி​யா​விட​மும் தோல்வி அடைந்​தோம். இந்த மூன்று தொடர்​களில், மக்​களால் எங்​களிட​மிருந்து எதிர்​பார்க்​கப்​பட்ட அல்​லது ஒரு அணி​யாக நாங்​களே எங்​களிட​மிருந்து எதிர்​பார்க்​கும் கிரிக்​கெட்டை விளை​யாட​வில்​லை.

ஆனால் அது கடந்த காலம், அதிலிருந்து நாங்​கள் நிறைய கற்​றுக்​கொண்​டிருக்​கிறோம். இலங்​கை​யில் நில​வும் வானிலையை நம்​மால் கட்​டுப்​படுத்த முடி​யாது. நாங்​கள் சிறப்​பாக விளை​யாடு​வதற்​காகவே இங்கு வந்​திருக்​கிறோம், எந்த வகையி​லான சவால்​கள் வந்​தா​லும், நாங்கள் அவற்​றைச் சமாளிப்​போம். இவ்​வாறு சல்​மான் அலி ஆகா கூறி​னார்.

உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதலா? - மனம் திறக்கும் பாகிஸ்தான் கேப்டன்
Dhurandhar: தேசபக்தி முலாம் பூசிய ‘பக்கா’ ஆக்‌ஷன் த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in