பாகிஸ்தானில் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய முஸ்லிம் ஓவியர்

பாகிஸ்தானில் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய முஸ்லிம் ஓவியர்
Updated on
1 min read

கராச்சி: பாகிஸ்​தானின் கராச்சி நகர் கோயி​லில் விநாயகர் சிலைக்கு முஸ்​லிம் ஓவியர் வண்​ணம் தீட்​டிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

கடந்த 1947-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​போது கராச்சி நகரில் 51.1 சதவீத இந்​துக்​கள் வசித்​தனர். சுதந்​திரத்​துக்​குப் பிறகு பாகிஸ்​தான் கட்​டுப்​பாட்​டுக்கு மாறிய அந்த நகரில் தற்​போது 1.12 சதவீத இந்​துக்​கள் மட்​டுமே உள்​ளனர். அங்கு 250 இந்து கோயில்​கள் இருந்த நிலை​யில் தற்​போது 50 கோயில்​கள் மட்​டுமே உள்​ளன.

கராச்​சி​யின் புறநகர்ப் பகு​தி​யான கஸ்​த​ரா​பாத் நகரில் பழமை​யான விநாயகர் கோயில் உள்​ளது. இந்த கோயிலை மராத்​தி​யர்​கள் நிர்​வகித்து வரு​கின்​றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோயில் வளாகம் புதுப்​பிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக விநாயகர் சிலைக்கு புதி​தாக வண்​ணம் தீட்​டப்​பட்​டது. கராச்​சியை சேர்ந்த பிரபல முஸ்​லிம் ஓவியர், விநாயகர் சிலைக்கு வண்​ணம் தீட்​டி​னார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகிறது.

பாகிஸ்தானில் விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டிய முஸ்லிம் ஓவியர்
இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் அமலுக்கு வரும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in