இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் அமலுக்கு வரும்

இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் அமலுக்கு வரும்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா–நியூசிலாந்து ஆகிய இரு நாடு​களுக்​கும் இடையி​லான பொருட்​கள் மற்​றும் சேவை​களின் இருதரப்பு வர்த்​தகத்தை அதி​கரிப்​பதுடன், முதலீடு​களை ஊக்​குவிக்​கும் நோக்​கில் கடந்த ஏப். 27-ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டன.

இரு நாடு​களும் பரஸ்​பரம் ஒப்​புக்​கொள்​ளும் தேதி​யில் அடுத்த மாதம் இந்த ஒப்​பந்​தம் அமல்​படுத்​தப்​படும் என்று வர்த்தகத்துறை அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார். இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம், இந்​தி​யா​வில் இருந்து நியூசிலாந்​துக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும் 100% பொருட்​களுக்​கும் வரி​யில்லா சந்தை அணுகல் கிடைக்​கும்.

இதற்கு முன்​பு, மட்​பாண்​டப் பொருட்​கள், தரை​விரிப்​பு​கள், வாக​னங்​கள் மற்​றும் வாகன உதிரி​பாகங்​கள் உள்​ளிட்ட இந்​தி​யா​வின் முக்​கிய ஏற்​றும​திப் பொருட்​களுக்கு நியூசிலாந்து 10% வரை இறக்குமதி வரி விதித்து வந்​தது. மேலும், அடுத்த 15 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் 20 பில்​லியன் டாலர் முதலீடு செய்ய நியூசிலாந்து உறு​தி​யளித்​துள்​ளது.

இந்​தி​யா–சிலி தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம்: இதற்​கிடையே, இந்​தி​யா–சிலி இடையே​யான தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​துக்​கான பேச்​சு​வார்த்​தைகளும் சுமுக​மாக முன்​னேறி வரு​வ​தால், அடுத்த மாதத்​துக்​குள் பேச்​சு​வார்த்​தைகளை நிறைவு செய்ய இரு நாடு​களும் திட்​ட​மிட்​டுள்​ள​தாக அதி​காரி தெரி​வித்​தார்.

இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அடுத்த மாதம் அமலுக்கு வரும்
சாதகமான சலுகை வழங்கினால் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாகும்: பியூஷ் கோயல் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in