ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த ரூ.1,700 கோடி மதிப்புள்ள அமெரிக்க ட்ரோன் மாயம்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த ரூ.1,700 கோடி மதிப்புள்ள அமெரிக்க ட்ரோன் மாயம்
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்டுள்ளது. இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை அனு​ம​திக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது.

இதை கண்​காணிக்க அமெரிக்க கடற்​படை​யின் எம்​கியூ-4சி டிரைட்​டன் என்ற ஆளில்​லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாய​மானது. இந்த ட்ரோன் சுட்டு வீழ்த்​தப்​பட்​டதா அல்​லது கீழே விழுந்து நொறுங்​கியதா என்​பது குறித்து விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

அமெரிக்க கடற்​படை​யிடம் மொத்​தம் 20 எம்​கியூ-4சி டிரைட்​டன் ட்ரோன்​கள் மட்​டுமே உள்​ளன. ஒரு ட்ரோனின் விலை சுமார் ரூ.1,700 கோடி ஆகும். இந்த ட்ரோன் சுமார் 50,000 அடி உயரத்​தில், தொடர்ச்​சி​யாக 24 மணி நேரம் பறக்​கும் திறன் கொண்​டது. ஒரே நேரத்​தில் 7,400 கடல் மைல் தொலைவு பகு​தி​களை கடந்து கண்​காணிக்​கும் திறன்​கொண்​டது. இந்த அதிநவீன ட்ரோன் மாய​மாகி இருப்​பது பல்​வேறு சந்​தேகங்​களை எழுப்பி உள்​ளது.

ஈரானுக்கு எதி​ரான போருக்​காக அமெரிக்க ராணுவம் ஒவ்​வொரு விநாடி​யும் ரூ.9.8 லட்​சத்தை செலவு செய்து வரு​கிறது. ஒரு நாளில் ரூ.3,040 கோடி மதிப்​பிலான ஏவு​கணை​கள், வெடிகுண்​டு​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

எதிரி​களின் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள், போர் விமானங்​களை நடு​வானில் இடைமறித்து அழிக்க தாட், பேட்​ரி​யாட் உள்​ளிட்ட ஏவு​கணை​களுக்​காக நாள்​தோறும் ரூ.902 கோடி செல​விடப்​படு​கிறது.

உளவு மற்​றும் சைபர் நடவடிக்​கைகளுக்​காக தினசரி ரூ.427.5 கோடி செல​விடப்​படு​கிறது. போக்​கு​வரத்​துக்​க​காக தினசரி ரூ.285 கோடி செல​விடப்​படு​கிறது. செலவு மற்​றும் இழப்பு அதி​கரித்து வரு​வ​தால் ஈரான் போரை முடிவுக்​கு கொண்​டு வரு​வ​தில்​ அமெரிக்​கா தீவிரம்​ ​காட்​டி வரு​வ​தாக தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பறந்த ரூ.1,700 கோடி மதிப்புள்ள அமெரிக்க ட்ரோன் மாயம்
சூர்யா முதல் சிம்பு வரை - விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய திரையுலக பிரபலங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in